பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 129 18. துரியன் முதலிய நூற்றுவர் நிலவு வம்சத்தில் நிலவின் களங்கத்திற்கு அறிகுறியாக அமைந்தவர்கள் இவர்கள். இவர்களைப் பற்றிய அறிமுகம் அற்புதமாக அமைந்துள்ளது. இவர்களில் துரியன், துச்சாதனன், விகர்ணன், துச்சலை பெயர்களே கதையோட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதவை. எனினும் வாலியார் நூறு பேரின் பெயர்களையும் தமது காவியத்தில் குறிப் பிட்டுள்ளார். ஆயினும் அப்பட்டியல் ஈண்டுக் காட்டப் பெறவில்லை. இவர்கள் பற்றிய அறிமுகம்: காட்டில் குந்திதேவி-ஒர் ஆண குழநதைககு அன்னையான செய்தி... காற்று வாக்கில் கண்ணிலா மன்னன் காதுக்கு வந்தது; உடனே காழ்ப்புணர்ச்சி காந்தாரி என்னும் மாதுக்கு வந்தது! மூவெட்டு மாதங்களாக கருவுற்றிருக்கிறாள் காந்தாரி, இன்னும் கைககு வநதபாடிலலை-ஒரு புழு பூச்சி! காந்தாரி கடுப்பானாள்; புகையும் அடுப்பானாள்! அவளைப் பிய்த்துப் பிடுங்கியது-ஒரு பிள்ளையைப் பெறாமை; அந்தப் .பெறாமை பெற்றெடுத்தது-ஒரு