பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அணிநலன்கள் & 221 உருபுகள் வெளிப்படையாகக் காணப்பெறுங்கால் 'உவமவிரி என்றும், இவை தொக்கு வரும்பொழுது 'உவமத்தொகை என்றும் வழங்கப் பெறுகின்றன. தாமரை அன்ன முகம் என்பது உவமவிரி, தாமரை முகம் என்பது உவமத்தொகை நாளடைவில் இவ்வுவமை உருபுகளின்றி உவமை வழங்கியது. மழைவண்கை, பொன்மேனி, துடியிடை என்பன போன்ற உவமத் தொகைகள் வழக்காற்றில் வந்தன; உவம உருபுகளுடன் சேர்த்துக் கூறுவதைவிட உருபின்றிக் கூறுவதற்கு வன்மை அதிகம் உண்டு. பொன் போன்ற மேனி என்று கூறும்பொழுது எழும் உணர்ச்சிக்கும், பொன்மேனி என்று கூறும்பொழுது எழும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தனர். இவ்வாறு உவமத்தொகையும் உவமவிரியுடன் சேர்ந்து சில காலம் வழங்கி வந்தது. உருவகம்: நாளடைவில் உவமப்பொருளையும் உவமிக் கப்பெறும் பொருளையும் வேறுவேறாகக் காணாமல் ஒன்றிலேயே மற்றொன்றினைக் காணும் முறை தோன்றியது. தாமரை முகம் என்பதை மாற்றி ‘முகத்தாமரை என்று கூறத் தொடங்கினர். அங்ங்னம் கூறுவதால் புதிய அழகும் தோன்றுகின்றது. தாமரை முகம்' என்று கூறும் பொழுது இரண்டு சொற்களாக விட்டிசைப்பதையும், 'முகத்தாமரை எனும்பொழுது ஒரு சொல்லாகி இரண்டினைச் சார்ந்த தனித்தனியுணர்ச்சி களும் ஒருங்கிணைந்து ஆற்றல்மிக்க உணர்ச்சியாய் வளர்வதையும் காணலாம். இதனைத்தான் உருவகம் (Metaphor) என வழங்குகின்றனர். பால் செறிந்து பனிப்பாலாடை (ice-Cream) ஆவதுபோல் அடங்கிச் செறிந்த உவமையே உருவகம் ஆகின்றது. இவ்வளர்ச்சி 2 Metaphoris nothingbut compressed simile—M.R.Ridley in his “Poetry and the Ordinary Reader- z/& &