பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 273 இராசசூய யாகத்தினால் பாண்டவர்களின் ஏற்றம் கண்டு பொறாமைப்பட்ட துரியன் நிலையை விவரிப்பார் வாலியார்: உழவுக் கொடியை-நீள் வயலில் உயர்த்தி-தனது முழவுக் கொடியை-மனை முகட்டில் உயர்த்தி-வெற்றி விழவுக் கொடியை-பெரும் வேள்வியில் உயர்த்தி-தருமன் இழவுக் கொடியை-துரியன் இதயத்தில் உயர்த்தினான்; இழுக்காற்றில் எப்பவும் இருந்து புரள்பவனை-இப்போது அழுக்காற்றில்-தருமன் அழுத்தி அயர்த்தினான்! நாகக் கொடியை நிமிர்த்திப் பிடிப்போன்-நிதம் சோகக் கொடியை சுமந்து நின்றான்; ‘சமத்காரம் இல்லாத சாதாரண தருமனுக்கு சார்வ பெளமன் என்று சோடசோப சாரமா? தவளையைத் தின்னும் தண்ணிப் பாம்பிற்கு ஆதிசேஷன் என்னும் அங்கீகாரமா? سه t;} &gT எரிச்சல் கொண்டான்! (I-பக். 109) என்பதாக. துரியோதனன் இழவுக் கொடியை உயர்த்தினான் என்று சொல்வதற்கு அமைத்த பீடிகை அற்புதம்! உயர்த்தியது எங்கே? தன் இதயத்தில்.