பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு : 279 இன்று தீர்ப்பேன்; ஒற்றையாய்நின்று தீர்ப்பேன்-விஜயனை வென்று தீர்ப்பேன் இல்லையேல்கொன்று தீர்ப்பேன் ! கவுரவர் சேனை களத்தில் கைகட்டி நின்றாலும் சரி! இல்லை கடைகட்டி சென்றாலும் சரி! (1-280-81) என்று சொல் உதிர்ப்பார். கர்னன் வாக்காக வாலியாரின் சொல் வீச்சில் 'யாக்கை-வாழ்க்கை', 'அன்று-இன்று-நின்று-கொன்று, கைகட்டி-கடைகட்டி என்ற சொல் இணைகள் விடும் பல்வேறு பொருள் ஒளிகள் வாலியின் சொற்றிறனை உணர்த்துகின்றன. நடைபெற வேண்டியவற்றை யோசிக்கக்கூடிய சபையில் ஆழிப்படையானும் மேழிப்படையானும் பேசி முடித்தபின் சாத்தகி என்னும் யாசுவ சூரன் வெடித்த பேச்சில் வாலியாரின் வாக்கு: 'தன் கருத்தை-ஒருவன் தாபிக்க தன்லைகீழாய் நிற்கலாம்; பல தேவனிடம் அதைக் கற்கலாம்! வக்கணையாய் வாதிப்பதாலும்; வாதித்து வாதித்து சாதிப்பதாலும். மறம் அறம் ஆகாது; குடம் குடமாய் நீராட்டினாலும்-காகத்தின் நிறம் போகாது!