பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிள்ளைப்பிராயம் முதல்-நான் புத்தியறிந்து-பொய்கள் புகன்றதில்லை! அடுத்தவர் நலம் கண்டுஅசூயைப் பட்டதில்லை; எனைக்கெடுத்தவர் தம்மையும் நான் கடுஞ்சொல்லால் சுட்டதில்லை; سمس 6 5irty நம்பிய பேர்களை-நான் நடுவில் விட்டதில்லை; ஈன்றகும்பியை-கோயிலாக-நான் கும்பிடாமல் கெட்டதில்லை! (1-பக். 220-21) இந்தப் பகுதியில் நம்பிய பேர்களை நட்டாற்றில் விடலாகாது', 'தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை, 'பொய் சொல்லலாகாது என்பன போன்ற பழமொழிகள்முதுமொழிகள்-பொதிந்து கிடக்குமாற்றைக் கண்டு மகிழலாம்! பாண்டவர்களின் சொத்தைப் பறிமுதல் பண்ண வேண்டும் என்ற திட்டத்தைச் சகுனி சொன்னதும் சீறி எழுந்து பேசுகின்றான் திருதராஷ்டிரன். கண்ணனுக்கு முதல் மரியாதை தந்தது. சிறப்பு என்பதை ஆமோதிக்கும் பாங்கில் இவன் பேச்சு அமைகின்றது. அவன் ஓர் அவதாரம் என்பதை உணர்கின்றான். கோனார்குடிப்பிறந்த கண்ணன்ஊனார்உடலெடுத்த கடவுள்; வாக்குத் தந்தான்