பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சிச் சிறப்பு & 313 (3) முதுகைக் கொள்ளிக் கட்டையால் ஆரேனும் சொறிவரோ? பன்னிருகைப் பெருமான் தந்த மாலையை வாங்க முன்வரவில்லை என்ற பொருளில் வருவது. ஆயிரம் பொன்னைஅள்ளிக் கொட்டினும்முதுகைக் கொள்ளிக்கட்டையால்ஆரேனும் சொறிவரோ? (1-பக். 54) பாடல் பகுதியை ஊன்றிப் படித்தால் மரபுத் தொடரின் பொருள் தெளிவாகும் (4) முதுகின் அச்சொடித்தது. வலியை இழக்கச் செய்தது என்ற பொருள் வருவது. பீமனின் பிரிவைப் பற்றி கவிஞர் வாலி கூறுகrது - ເພ6ຫfl6or- பிரிவானது. அர்ச்சுனன் முதுகின் அச்சொடித்தது; (I – Ljë. 179) சந்தர்ப்பத்தை நினைத்து பாடலைப் படித்தால் பொருள் தெளிவாகப் புலனாகும் (5) கதை அளத்தல்: இல்லாததைக் கூறுதல் என்ற பொருளில் வருவது பொருள் உதவி நாடி வந்த துரோணனை துருபதன் கிண்டல் செய்து எள்ளுவது ‘ஆரிடம்அளக்கிறாய்? வெற்றுக் கதைகளை-ஏன் வளர்க்கிறாய்? (1-பக். 206) இடம் நோக்கி பாடலைப் பயின்றால் மரபுத் தொடரின் பொருள் பளிச்சிடும்!