பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அங்ங்ணமே அனைவர் சாபத்தையும் அர்ச்சுனன் தீர்த்தான்; அவர்களை வானம் சேர்த்தான்! (I-பக். 34-35) இராம காதையில் வரும் விராதன், கவந்தன் போன்றவர்கள் தமது குறும்புச் செயல்களால் இத்தகைய சாபங்களைப் பெற்றவர்கள். ஆனால் சாபம் கொடுத்த வர்கள் இராம இலக்குவனர்களால் சாபம் விமோசனம் தந்து சென்றதை ஆங்குக் காண்கிறோம். ஆனால் அப்படிப் பெயர் சொல்லிக் குறிப்பிடாமல் ஆற்றல்மிகு ஆண்மகன் என்று குறிப்பிடப் பெற்றுள்ளது இங்கு. 5. கற்புக்கரசியின் கதை வானுலகத்திலிருந்து விஜயன் திரும்பியதும் பல்வேறு அத்திரங்கள், பாசுபதம் ஆகியவற்றைப் பார்த்தன் பெற்ற பின்னர் பாண்டவர்கள் ‘கந்தமாதனம் விட்டுத் திரும்பி காம்யவனம் அடைந்து அங்கேயே எஞ்சியுள்ள வனவாச காலத்தைக் கழிப்பதெனத் தீர்மானித்தனர். அப்போது ஒருநாள் மார்க்கண்டேயர் அவண் போந்தார். பெண்ணின் பெருமையைக் கூறிய தருமன் கருத்தையொட்டிக் கற்புக் கரசியின் கதையைக் கூறினார். அவர் வாக்கில் வாலியார் கூறுவது: ஒரு பிராமணன் இருந்தான் பழைய நாளில்; அவனது பெயர் கவுசிகன்; பண்டிதன் பழமறை நாவில்!, ஒருநாள. அவன ஒரு மரத்தடியில்அமர்ந்து-வேத அத்தியயனம் செய்கையில்...