பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 379 பூமியில் அறைந்தான்; தெறித்த முத்து மோதிரங்களைப் பொறுக்கமுடிச் சாத்துடைய பணியாள்மூலைக்கு மூலை விரைந்தான்! துரியன்-மீசையைத் துழாவிய படியே... ஆடியின்முன்-தன் அழகு பார்த்து நின்றான்! அவன்மீதுஅவனுக்கே கோபம் வர... அவனை அவனேஅடித்துக் கொன்றான்! ஆடியும் ஆடியில் தெரிந்த கயோதனனும் சில்லுசில்லாக... குத்துவிட்ட முட்டியில்குளமாய் ரத்தம்; காழ்ப்பில்கன்னாபின்னா வென்றாகிசின்னா பின்னமானது சித்தம்! (II - பக். 109-10) கோபம் வந்தால் மனிதன் என்ன செய்கின்றான் என்பதே அவனுக்குத் தெரியாது. இந்த நிலையில் நாம் அரவக்கொடி யோனைக் காண்கின்றோம். (v) விழியிலான்: துரியோதனனும் சகுனியும் கண்ணிலானிடம் வருகின்றனர். சகுனி துரியோதனின் கவலையை திருதராட்டிரனின் விரிவாக எடுத்தோதி தருமனின் எல்லாச் சொத்துகளையும் பறிமுதல் பண்ண வேண்டும் என்று அவன் குலமுதல் குதிப்பதாகச் சொல்ல,