பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் & 385 அர்ச்சுனன்-சுபத்திரை, நளன்-தமயந்தி போன்றவர் வாழ்க்கையில் இச்சுவை காட்டப்பெறுகின்றது. வருண னைப்பற்றிய இயலில் இயல்-2 காம இச்சை 7ஆம் தலைப்பு என்ற பகுதியில் இச்சுவைபற்றிய விவரங்கள் தெரிவிக்கப் பெற்றிருப்பதால், ஈண்டு அதைப்பற்றி விவரிக்கவில்லை. இந்த இயலின் முற்பகுதியில் சொல்லப்பெற்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இச்சுவையை அநுபவித்தால் சுவை தெளிவாகும். 4. அச்சச் சுவை. கீசக வதம் துரியோதனனின் மனத்தில் ஐயத்தை விளைத்தது. வீமனைத் தவிர அவனை யாராலும் கொல்லவொண்ணாது என்று கருதிய கண்ணிலான் மைந்தன் விராட நகரை இருமுனைத் தாக்குதல் நிகழ்த்தி வெவ்வேறு வேடம் புனைந்து பாண்டவர் நிகழ்த்தும் வெளிவராத நாடகத்தை வெளிப்படுத்தினால் அவர்களை மீண்டும் பன்னிரண்டு ஆண்டு வரை வனவாசம் அனுப்பலாம் என்பது அவனது திட்டம். தென்புற இடைச்சேரியில் உள்ள கறவைகளைக் கவர சுதர்மன் தலைமையில் ஒரு சேனை வளைத்து நின்றது. கங்கன் என்ற தருமன் தந்த உற்சாகத்தால் வயதான விராட அரசன் தலைமையில் ஒரு சேனை தயாராகி சுதர்மனின் சேனையை எதிர்த்தது. வடபுறத்தில் துரியன் தலைமையில் வந்த சேனையை பிரகன்னளை வேடம் பூண்டிருந்த அர்ச்சுனன் தேரோட்ட விராட அரசனின் மகன் உத்தரன் தயாரானான். உத்தரன் தேரில் அமர்ந்தபடியே கவுரவரின் பெருஞ்சேனையைக் கண்ணுற்று அச்சம் மேலிட்டு தேரிலிருந்து தொப்பெனக் குதித்து ஊரை நோக்கி ஒடலானான். பிரகன்னளை அவனைத் துரத்திச் சென்று ஒரு வழிய்ாய்ப் பிடித்து நிறுத்தினாள். அகப்பட்ட அரசகுமாரன் பிரகன்னளை யிடம் கூறுவது. -