பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவைகளின் நிறம் * 387 ராஜகுமாரா! நீரெளத்திரம் பழகு; புலாலைப் புசிக்காதுபுறந்தள்ளிவிட்டுபுளியோதரை புசிப்பதாபுலிகளுக்கு அழகு? சாமானியனல்ல-சமர்வரின் சமாதானமாய்ச் செல்ல; நீசத்திரியன்-சமர்செய்; சமர்த்தலில் காட்டு உன்சமர்த்து, சமர்செய்ய-பகை அமர்த்தலில் வரின்-அடித்து அமர்த்து! மன்னன் மரயே! உனக்குரியதீரத்தில்-கூடாது திரியே! குருதியை-உன் குடிநீரெனக் கொள்; குத்துவெட்டெனில்-கங்காருக் குட்டிபோல் துள்; உனைப் பொருதுவோன்-உன் உள்ளத்தாள் முள்; எனினும் உறங்கவிடாதே வாளைஉறையின் உள்; நேர்இருக்கும் இகலை-அட! இவனா? என எள்; அவனைஇல்லையென்றாக்கு அவனுறவுஇறைக்கட்டும் எள்! 2 இது பாரதியின் புதிய ஆத்திசூடி (பலவகைப் பாடல்கள் தலைப்பில் உள்ளது)யில் உள்ள வாக்கியம். 3 'புல்லைப் புசிப்பதா? என்றிருக்க வேண்டியது வைணவ உணவில் சிறப்பான புளியோதரை வருகிறது. காரணம், கவிஞர் வாலி வைணவராதலால்.