பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு நிழல்படாது-தள்ளி عربری நின்றவனும் இல்லை! (I-பக். 125-26) திருதராட்டிரன் வேறு வழியில்லாமல் துரியன் திட்டத்தை ஒப்புக்கொண்டு பழியை விதிமீது சுமத்துகின்றான். இதே கட்டத்தில் பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் பேச்சை ஒப்புநோக்கி அநுபவிக்கத் தக்கது. 'விதிசெயும் விளைவினுக்கே-இங்கு வேறுசெய் வார்புவிமீ துளரோ? மதிசெறி விதுரன் அன்றே-இது வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்; "அதிசயக் கொடுங்கோலம்-விளைந் தரசர்தங் குலத்தினை அளிக்கும்” என்றான்; சதிசெயத் தொடங்கிவிட்டாய்-“நின்றன் சதியினிற் றானது விளையும்” என்றான். விதி! விதி! விதி! மகனே!-இனி வேறெது சொல்லுவன் அடமகனே! கதியுறுங் காலனன்றோ-இந்தக் கயமக னெனநினைச் சார்ந்துவிட்டான்? கொதியுறு முளம் வேண்டா-நின்றன் கொள்கையின் படிஅவர் தமைஅழைப்பேன்; வலியுறு மனைசெல்வாய்-என்று வழியுங்கண் ணிரொடு விடைகொடுத்தான். " (6) பாஞ்சாலியைப் பந்தயப் பொருளாய் தருமன் வைக்க நினைத்ததும் விதியின் விளையாட்டே என்பதைக் குறிக்கும் பகுதி: அதிர்ஷ்டம் மிகுந்ததாரத்தை வைத்தாடினால்தருமன் வெல்லலாம்; இழந்ததை யெல்லாம் மீட்டுஇந்திரபுரி செல்லலாம்! 6 பாஞ்சாலி சபதம்-107, 108