பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இதனால் நேர்ந்ததைக் கவிஞர் வாலி: சருமம் கொண்டு சகதலத்தில் உலவும் தருமம் தட்டழிந்தது; வந்தகாலம் முதற்கொண்டு-சிறு கீறல் விழாது காத்த-அதன் சீலம் கட்டழிந்தது! என்று தம் கண்களில் நீர் சொட்ட- படிப்போர் கண் திரையை நீர்ப்படலம் மறைக்க-கூறுவர். (7) தருமன் சூதாட்டத்தில் இறங்கப் போவதை நினைந்து வானமே அழுதது என்று கூறுவர் கவிஞர் வாலி: 'வெள்ளை வெளே'ரென விடிந்தது பொழுது; எனினும், வான்முகம் வீங்கியிருந்ததுவிடியவிடிய அழுது! நெடுநாளாய்-தன் நீள வீதியில்உலாவி வரும்நிலாவின் குலம்... சூதால்சுக்குநூறாய்ப் போவதை விதிசொல்லிவான் அழுதது; அதனால்தான் விடியவிடியவிழிநீர் சொரிந்தது! வான் அழுதாலென்ன? வான்மீன் அழுதாலென்ன? கான் அழுதாலென்ன? கான் மான் அழுதாலென்ன?