பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் : 467 அண்ணனிடம் இதைத் தடுத்து நிறுத்துமாறும், சகுனியை அவன் ஊருக்கே அனுப்பிவிடுமாறும் வேண்டுகின்றான். துரியன் இதைப் பொறுக்க முடியாமல் சிற்றப்பன்மீது வசைமாரி பொழிந்து அங்கிருந்து வெளியேறிவிடுமாறும் கூறுகின்றான். நன்னெறி விதுரன், போக்கை மாற்றாது பதிலுறுத்தான் ‘புல்லனே! நான் போவதை இருப்பதை நீ யாரடா நிர்ணயம் செய்ய? நிகழ்த்தினேன் உரை நீ உரிய! உன் செவிக்கும் சிந்தைக்கும்-தேன் சேர்க்கப் பேசுவோன்-உன்னை அவிக்கும் அனல்; உன் புகழைக் கவிக்கும் கங்குரைக் களையக் கைப்பாய்ப் பேசுவோன்-குளிர் குவிக்கும் புனல்! படுகுழியில் படுபாவிநீ விழாதிருக்கப் படுகிடையாய்-குறுக்கே படுத்துத் தடுத்தேன்; பீஷ்மன் வாய்க்கதவம் பூட்டிக் கிடப்பதால் பேதைநான் பேதலித்துப் பெருங்குரல் கொடுத்தேன்! சிவனே என்றிராமல் சிலபல சொன்னேன் மகனே! உன் மேன்மை கருதி, வென்றது விதி; வென்றது விதி;