பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைகளும் படிப்பினைகளும் & 469 “கடுஞ்சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும் கருங்கல்லில் விடந்தோய்ந்த நெஞ்சுங்கொண்டோர் படுஞ்செய்தி தோன்றுமுன்னே படுவர்கண்டாய், “பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர் இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்பார் இளகுமொழி கூறார்” என்றினைத்தே தானும்நெடும்பச்சை மரம்போல வளர்ந்து விட்டாய் நினக்கெவரும் கூறியவ ரில்லைகொல்லோ? (214} ‘நலங்கூறி இடித்துரைப்பார் மொழிகள் கேளா நரபதி! நின் அவைக்களத்தே அமைச்ச ராக வலங்கொண்ட மன்னரொடு பார்ப்பார் தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய்! சிலங்கைப்பொற் கச்சணிந்த வேசை மாதர் சிறுமைக்குத் தலைகொடுத்த தொண்டர், மற்றுங் குலங்கெட்ட புலை நீசர் முடவர் பித்தர் கோமகனே! நினக்குரிய அமைச்சர் கண்டாய்! (215) 'சென்றாலும் நின்றாலும் இனிஎன் னேடா? செப்புவன். நினக்கெனநான் செப்பினேனோ? மன்றார நிறைந்திருக்கும் மன்னர் பார்ப்பார்’ மதியில்லா மூத்தோனும் அறியச் சொன்னேன்; இன்றோடு முடிகுவதோ? வருவ தெல்லாம் யானறிவேன்; வீட்டுமனும் அறிவான் கண்டாய்! வென்றான்.உள் ஆசையெலாம் யோகி யாகி வீட்டுமனும் ஒன்றுரையா திருக்கின்றானே (216) 'விதிவழிநன் குணர்ந்திடினும் பேதை யேன்யான் வெள்ளைமன முடைமையினால் மகனே, நின்றன் சதிவழியைத் தடுத்துரைகள் சொல்லப் போந்தேன்; சரிசளிஇங் கேதுரைத்தும் பயனொன் றில்லை, மதிவழியே செல்லு, கென விதுரன் கூறி, வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்; பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்; பாரதப்போர் வருமென்று தேவர்.ஆர்த்தார் (217)