உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவடைலத இதிகாசங்கள்

இந்திய நாட்டின் இன்றைய குடிமகன் இதிகாசங்களைத் தொடர்கின்றான்!

சந்ததி போற்றும் இலக்கியங்களிலே

சாதகப் பட்டதைப் படைக்கின்றான்!

உவமானத்துடன் இராமாயணக் கதை

உருக்கமாகக் கேட்ட பின்பு

அவனவன் வீட்டுத் தோட்டங்களிலே

அசோக வனங்கள் அமைக்கின்றான்!

பாஞ்சாலிக்கு ஆடைவழங்கிய பரந்தா மன்பேர் பாடிவிட்டு

நோஞ்சான் கூட துச்சா தனனாய்

நூறு பாஞ்சாலி துகிலுரிவான்!