உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுக்குப்படாத ஆறடி நிலம்:

அன்னை பாரதத்தில் அழுக்குப் படாதநிலம் கண்ணில் படுகிறதா? கண்டறியச் சென்றேன் நான்!

இமயம் முதல் குமரிவரை எத்தனை பரப்பளவு? இமைகளை மூடாமல் இரவுபகல் சுற்றி வந்தேன்!

ஆலைகள் நீதிமன்றம் அரசாங்கக் கட்டடங்கள் சாலைகள் சட்டமன்றம் சலிப்பின்றிப் பார்வையிட்டேன்!

கடைவீதி வங்கிகள் கல்வி நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகள் குடிசைகள் சுற்றினேன்!

அழுக்குப் படாதநிலம் அங்குலமும் தேறவில்லை!