உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்தக் குறுக்கம் அருந்தமிழ் இலக்கணம்! ஆயுதக் குறுக்கம் அமைதிக்கு இலக்கணம்!

எதிரி என்கிற வார்த்தையை இனிநம் உதடுக ளுக்குப் பழகிட வேண்டாம்!

புதிய மனித அகரா தியிலே எதிர்ப்பதங் களுக்கு இடம்கிடை யாது!

பூமியின் முற்றம் முழுவதும் சுற்றம்:

புறப்படு நண்பா, அமைதியைப் பாடியே!