உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குலத்தார் தம்மைத்

தெருக்குலத்தா ராக்கியது நரிக்குலத்தார் செய்த

நாடகம் என்பதனை

முகத்திரையைக் கிழித்து

முத்திரைபதித்த தவர்.பத்திரிகை பகுத்தறிவு வகுப்புகளின்

பாடநூல் களவை!

விலக்கிவைத்த ஊருக்கும்

விலகிநின்ற சேரிக்கும்

கலப்புமணம் செய்து வைத்த

கல்யாணப் பத்திரிகை!

"மகர் இனத்துத் தோழனே!

மனிதன்தான் நீயும்

மனம் தெளிந்து நிமிர்!

மற்றவனோடு நீ சரிநிகர்!