பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

111


தமிழில் எடுத்ததை விளக்கப் புலவர் ஆற்றலுக்கு உறுதுணையாகத் தமிழின் எழுத்துக்களும் சொற்களும் அமைந்துள்ளன. ஒரு பொருளைப்பற்றியோ, மனித்னைப்பற்றியோ பாடும் கவிதையில் அப்பொருளின், அன்றி மனிதனின் நற்பண்பு வெளிப்படவேண்டும். மனிதனின் பண்பு கவிதையில் வெளிப்படுவதெவ்வாறு? மனிதனுக்கு இயல்பாகப் பல குணநலன்கள் அமைந்துள்ளன: அவை கவிதை நலமாக மாற வேண்டும். மனிதன் உள்ளத்துணர்வை விெளிப்படையாக 'எவ்வாறு அறிவது? அவ்வாறான அவன் உணர்வை அவனது உடலே காட்டிவிடும். ஆதலினாலேதான் 'தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் என்ற ஒன்றைச் செய்யுள் இயலின் முன் வைத்துள்ளார். தமிழ்த் துறையில் விளங்கும் அகமும் புறமும் கலந்தது பொருள். அப்பொருள் சிறக்கவேண்டிய இடம், மக்கள் வாழ்க்கை. அவ்வாழ்க்கையை வெளியில் காட்டுவது அவர்தம் மெய்ப்பாடே யாகும். அப்பொருளையும் மெய்ப் பாட்டையும் உவமத்தின் உறுதுணையாகக்கொண்டு செய்யுள் வழியில் விளக்கவருவதே கவிதையாகும். அக் கவிதையும் மரபு நலம் கெடாதிருக்க வேண்டும். இந்த உண்மையையே தொல்காப்பியப் பொருளதிகாரம் நமக்கு விளக்குகிறது. உவமத்தையும் மரபையும் பற்றிப் பின்னர்ப் பார்க்கலாம்.

மெய்ப்பாட்டை வெளிக்காட்டுவதே கவிதை: அதுதான் வாழ்க்கையுங்கூட. ஒருவன் உள்ள்ம் செம்மையுற்றுச் சிறக்கிறது என்பதை அவன் மெய்ப்படு செயலால் அறியமுடியும்; அவனது வாழ்வு அந்நிலையை விளக்கிக் காட்டும். தொல்காப்பியர் அம் மெய்ப்பாட்டை எட்டுவகையாகப் பிரித்துக் காட்டுகின்றார்: நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன அவை. இவற்றை இன்னும் பலவாறு பிரிக்கின்றவரும் உள்ளனர். அதைப்பற்றிய ஆராய்ச்சி நமக்கு வேண்டா. இந்த மெய்ப்பாட்டைக் கவிஞன் தன் கவியிடைக் காட்டும் கவிதை நலனையே நாம் காணல் வேண்டும். ஆம்! வெறும் புறத்தோற்றங்களை மட்டும் புனைந்துரை வகையாற் பாடுவதல்லது, உணர்தற்கரிய மக்கள்