பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை நலன்

131



யினால் உண்டாகும். பயனும், கொடையால் உண்டாகும் பயனும்'பிறரை மகிழ்வித்தல்' என்ற அளவில் செல்லுதலின், இது பயன் உவமமாயிற்று. தோற்றத்தை உவமைப்படுத்துவது உரு உவமமாகும். இது 'பொன் போன்ற மேனி' என உடலின் தோற்றத்தைப் பொன்னுக்கு ஒப்பு ஆக்குவதாய் நிற்கும். இது உரு வுவமமாயிற்று. ஆனால், இதற்கு முன்வரும் மெய் உவமம், 'துடியிடை' என்பதைக் காட்டாகப் பெற்றது. இது 'துடி போன்ற இடை' என விரிகின்றது. மெய்யின் தன்மைக்கு 'உவமிப்படுத்தலின் இது மெய் உவமமாயிற்று. இவற்றுள் மெய்யும் உருவும் அத்துணை வேறுபாடுடையனவாகத் தோன்றா. ஆனால், பேராசிரியர் இரண்டையும் நன்கு வேறுபடுத்துகின்றார், 'கண்ணுக்குப் புலனாகும் பண்பினையும், உற்று உணரும் பண்பினையும் வேறாக நோக்கி, இவ்வாறு தொல்காப்பியர் இரண்டாக்கினார்', என்று கூறுகின்றார். துடியிடை, இரவிலும் கண்ணில் தோன்றும். ஆனல், பொன் மேனி இருளில் புலப்படுவதெங்கே? இவ்வகை வேற்றுமையே உருவும் மெய்யும் வேறுகொள வைத்தது. உருவுவமத்தைப் பிற்காலத்தார் பண்பு உவமை என்பர். இவற்றின் விரிவையெல்லாம் நாம் இங்கு ஆராயவேண்டா. இங்கு ஆய்வு தேவையுமில்லை. கவிதை நலனுக்கு அணியாகிய இந்த உவமை நான்கு வகையாகும் என்பது மட்டும் நாம் அறிந்துகொள்ளுதல் போதும். அதனுட்ன் இவை தனித்து வருவதோடு, ஒன்றோடொன்று கலந்து ஒரு பொருளுக்கே ஒன்றுக்கு மேற்பட்ட உவமை நலன்கள் பொருந்தி வருவதும் உண்டு.

இவ்வுவமை நலன்பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார் பல சூத்திரங்களில் விளக்கிச் செல்கின்றார். அவற்றுள் இவ்வுவமையின் பிரிவுகளும், உவம உருபுகளும், அவற்றுள் நால்வகை உவமங்களுக்கான தனித்தனி உருபுகளும் கொள்ளக் கிடக்கின்றன. மேலும், உவமப் பொருளை உணரும் வகையையும் அகப்பொருளில் உவமை உதவும் நெறியினையும் குறிக்கின்றார். முன்னர் 'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை' என்று கூறிய போதிலும், உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் (8)