பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

2. உயிர்த்தோற்ற வளர்ச்சி


ணுவைப் பிரிக்க முடியாது என்று. எண்ணியிருந்த அந்தக் காலத்திலும், அணுவைப் பிளந்து அதனல் அனைத்தையும் அழிக்க முடியும் என்றுகண்ட இந்தக் காலத்திலும், மேலைநாட்டு அறிஞர்கள் இவ்வுலகில் உயிர் உண்டான் நாளையும், அவை ஒன்றை ஒன்று பற்றி நின்று வளர்ந்த வகையையும் ஆய்ந்து கொண்டேயிருக்கின்ருர்கள். விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத சில நூற்ருண்டுகளுக்கு முன்னிருந்து இன்றுவரை ஆராய்ச்சி சென்றுகொண்டே யிருக்கிறது. உயிர்களின் தோற்ற வளர்ச்சியைப் பற்றிப் பலப்பல நூல்கள் வளர்ந்துகொண்டே செல்கின்றன. இவ்வுலகில் உயிர்கள் எவ்வாறு தோன்றின? எப்படி வளர்ச்சியுற்றின? என்பனவற்றையெல்லாம் அவை ஓரளவு வரையறை செய்து காட்டியிருக்கின்றன. உலகத் தோற்றத்தின் அளவும் அமைப்பும் போன்றே, உயிர்த் தோற்றத்தின் அமைப்பும் வளர்ச்சியும் அமைகின்றன என்று சொல்லலாம்.

நிலம் தோன்றி, மண் திண்ணிதான காலத்து உயிர்த் தோற்றம் உண்டாகியிருக்கலாம் என்பர் ஆராய்ச்சியாளர். உயிர்த்தோற்ற வளர்ச்சியின் இன்றைய இறுதிப் படியே மனிதன். ஆனல், இதுதான் முடிந்த முடிபு என்று கொள்ள