பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கவிதையும் வாழ்க்கையும்



தாகக் காட்டுகின்றனர். அறிவு வளர்ச்சியின் க்ணக்குப்படி முதலாவது ஓரறிவுடைய உயிர்களே தோன்றப் பின்ன்ர் இரண்டறிவுடைய கடல்வாழ் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும். ஒருவேளை விஞ்ஞானிகள் அந்த முடிவுக்கு விரைவில் வரக்கூடும். .

‘புல்லும், மரமும் மற்றுமுள்ள தாவரங்களுங்கூட அனைத்தும் ஒரே காலத்தில் தோன்றின என்று கூறிவிட முடியாது. சிறு புல்பூண்டுகள் முதலில் தோன்றி நாளடைவில் பெரும் மரங்களாய் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அந்தத் தாவர ஊழியின் இறுதியிலே ஒரு பெருங்கடற் கொந்தளிப்பு உண்டாகியிருக்கும். பெரும்பான்மையான தாவரங்கள் நிலத்தால் மூடப்பட்டதாகிய அந்தக் காலத்திலேதான், நீர்வாழ் உயிர்கள் பெருகியிருக்கக் கூடும். அவ்வாறு பேருழியால் நிலத்தில் புதைக்கப்பட்ட, தாவர வகைகளே இன்று நிலக்கரியாய் மாறி இன்றைய உலகுக்குப் பலவகையில் பயன்படுகின்றன என்பர் சிலர். எது எப்படியாயினும், தாவர வாழ்வும் நீர்உயிர் வாழ்வும் உலகில் நெடுங்காலம் நிகழ்ந்தப் பின்பே, பிற உயிர் வாழ்க்கை முறைகள் தோன்றியிருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. விஞ்ஞானிகள் மீனினத்துக்குப் பிறகு ஊர்வன தோன்றியிருக்க வேண்டும் என்பதைக் கண்டுள்ளார்கள். 'நீரிலும் நிலத்திலும் கலந்து வாழும் அந்த உயிர்ப்பிராணிகள் இன்றும் வாழ்கின்றன. பாம்பு, ஆமை, சங்கு, நத்தை முதலியன அந்த இனத்தைச் சேர்ந்தவைதாமே? இவை நீரிலும் வாழ்கின்றன.நிலத்திலும் ஊர்கின்றன. தொல்காப்பியினார் இந்த இனத்தைத்தான் 'நந்தும் முரளும்' எனக் குறிக்கின்றார் போலும்! மீனும் நீரில் வாழும் உயிராயினும், அது காலத்தால் பிந்திய ஒரு வளர்ச்சியாய் இருக்கலாம். நந்தும் இப்பியும் தோன்றுமுன் இருந்த கடல்வாழ் உயிர்களுக்கும் இன்றைய கடல் வாழ் உயிர் களுக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருந்திருக்கக்கூடும். மீனினே நந்து இப்பிக்கு முன் கூற முடியாதன்றோ? அவை கண்ணறிவு பெற்றனவாயும் உள்ளனவே! எனவேதான்