பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

கவிதையும் வாழ்க்கையும்



அவற்றின் அடிப்படையிலே இருக்கவேண்டிய அமைதிக்கு மாறாக ஆரவார மும் வெறியுமல்லவா நாடுதோறும் நிறைந்திருக்கக் காண்கின்றோம்? மொழி காரணமாகவே நாட்டில் கிளர்ச்சியும், கொந்தளிப்பும், கொலைகளும் நடக்கக் கூடிய அத்தகைய நாகரிக நாளில்-நாகரிக நாட்டில்-நாம் வாழ்கின்றோமே! ஆயின், மொழி எப்படித்தான் வளர்ந்தது? இம்மொழிகளை ஆராய எத்தனையோ கலைக்கழகங்கள் உள்ளன. மொழி வரலாற்றையும், வளர்ச்சியையும், அமைப்பையும் பற்றிப் பலப்பல நூல்கள் நாடுதோறும் வெளி வந்துகொண்டேயிருக்கின்றன. அவைகளைக் குடும்பம் குடும்பமாகப் பிரித்துள்ளார்கள். திராவிடக் குடும்பம், துரானியக் குடும்பம், இந்தோஐரோப்பியக் குடும்பம் என்று மொழிகளுக்குள் எத்தனையோ வகைவகையான குடும்பங்கள் தோன்றி வளர்ந்துவிட்டன. நம் தமிழ்மொழிதான் எவ்வெவ்வாறு பகுக்கப்பட்டது. கொடுந்தமிழ் வழங்கிய மலையாள நாட்டில், இன்று தமிழொடு வேறு பட்டது என்று கொள்ளத்தக்க வகையில் மலையாளம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லையா? ஆம்; இத்தன வேறுபாடுகள் எப்படித் தோன்றின? ஆதி மனிதன் இவ்வாறு மொழிவெறிச் சண்டையை வளர்க்கவா எண்ணியிருப்பான்? இல்லை-நிச்சய மாக எண்ணியிருக்க மாட்டான்.

ஆதி மனிதன் பேசினான் என்றுகூடச் சொல்ல முடியாது. அவன் தன் உள்ளக் கருத்தை உறுப்புக்களின் அசைவு மூலம் புலப்படுத்தியிருப்பான்; கையைக் காட்டியும், தலையை ஆட்டியும் கருத்தை அறிவித்திருப்பான்; பிறகு, எப்படியாவது ஒலியை எழுப்பி, உள்ள உணர்ச்சியை புலப்படுத்தியிருப்பான் ஆதி மனிதன் தோன்றி நெடுங்காலத்துக்குப் பின்னரே பேச்சுப் பிறந்திருக்கும். அப் பேச்சும் எழுதாக் கிளவியாய் எத்தனை எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இருந்ததோ, அறியோம்! இன்றும் நாட்டில் எத்தனையோ சிறு சிறு மொழிகள் எழுத்துக்கள் அற்றவையாயினும், ஆயிரக்கணக்கான மக்களால் பேசப்படுவதை நாம் அறிவோம். ஆகவே, அந்த முதல் மக்கள் கூட்டம் பேசிய மொழி திருந்தா மொழியாகத்