பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

கவிதையும் வாழ்க்கையும்



எடிங்டன் என்ற ஆய்வாளர் தமது விண்மீனும் அணுவும்'[1] என்னும் எழுத்தில், இந்த அளவினை ஒருவாறு காட்டியிருக்கிறார். மனிதன் அணுவுக்கும், வானில் தோன்றும் ஒரு சாதாரண அளவுள்ள விண்மீனுக்கும் இடையில் நிற்கின்றான் என்கிறார். அணுவின் நிலையைப்போல் பத்தின் இருபத்தேழு பெருக்கு (10") பரிமாணம் இன்றைய மனிதன் நிலை. அன்தப் போன்றே மனிதன் தோற்ற நிலையைப்போன்று பத்தின் இருபத்தெட்டுப் பெருக்குப் (10%) பரிமாணம் ஒரு விண்மீனின் அளவு என்றும் அவர் குறிக்கின்றார். இதைப் போன்றே, ஐன்ஸ்டைன்[2] கொள்கையின் அடிப்படையில் சூரியன் ஓர் இடைப்பட்ட இலக்காக நிற்கின்றான் என்கின்றார் ஹக்ஸ்லி[3] (p. 80) - என்பார். எப்படி மனிதன் அணுவுக்கும் விண்மீனுக்கும் இடையில் ஒர் அளவுகோலாக அமைகின்றானே, அப்படியே சூரியன் பரந்த அண்டகோளத்துக்கும், நாம் காணும் பருமரத்துக்கும் இடையில் ஓர் அளவுகோலாக நிற்கின்றான் என்கின்றார். அஃதாவது, சூரியன் மரத்தைப் போன்று 10 மடங்கு விரிந்த தாகின்றது. இன்னம் மற்றொரு வகையில் அணுவுக்கணுவாகிய எலெக்டிரானுக்கும்[4] அண்டகோளத்து இடையில் உலகில் காணும் மனித சமுதாயத்தின் தோற்ற அளவையே வைக்கின்றார். தனி மனிதனுடைய அளவு எவ்வாறு அணுவுக்கும் விண்மீனுக்கும் இடையில் நிற்கின்றதோ, அவ்வாறே உலகில் வாழும் பலகோடி மக்கள் அனைவரின் பருவுடல் அளவு அனைத்தும் ஒன்று சேரின், அது அத்துகளுக்கும் அண்டகோள எல்லைக்கும் இடையில் நிற்கின்றது. அஃதாவது, உலகில் வாழும் எல்லா மக்களின் பருவுடல் சேர்க்கையில் மொத்த அளவு) அணுத்துகளிலும் எத்தனை மடங்கு பெரியதோ அதே அளவு பெரியது எல்லா மனித உடல் சேர்க்கையின்

  1. 1. EDDINGTON.—Stars and Atoms
  2. 2. EINSTEIN
  3. 3. JULIAN HUXLEY—Man in the modern world
  4. 4. ELECTRON