பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

23


பெருக்கெடுக்கும் கவிதையே கலையாகச் சிரஞ்சீவித்துவம் பெற்று வாழ்வது.

அவ்வொன்றிய உள்ளம் பெறுவது எளிதன்றுதான். ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது!’ என்று தாயுமானவர் பாடியதன் கருத்து அதுதான். அவ்வாறு பல விடங்களில் பறந்து செல்லும் சிந்தையை அடக்குவுது எளிதன்று. ஆனால், அடக்கி ஒரு வழிச் செலுத்தாவழிக் கவிஞன் தன் கலையை வாழ வைக்க முடியாது. இந்த மனி அடக்கத்துக்கும் ஒருமை உணர்வுக்கும் வெற்று ஏட்டுப்படிப்பு மட்டும் பயன் தாராது. உணர்வு அடக்கும். நல்ல உள உரம் தேவை. கல்லாதவனும் கலைஞகை முடியும். ஆம்; அவன் உணர்வு ஒருமைப்பாடுமானல், அவன் கலைஞனே யாவன்.

காட்டில் வாழும் ஒரு வேட்டுவனைக் கலைஞகைக் காண்கின்றார் சுந்தரர். அவன் கலைகளை யாரிடமும் எழுத்தறக் கற்கவில்லை. கலை என்பது என்ன என்பதுகூட அவனுக்குத் தெரியாதிருந்திருக்கலாம். அவன் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது காணாத ஒரு பொருளைக் கண்டான்; கண்ட உடனே கருத்தழிந்தான்; தன்னை மறந்தான்; உடன் வந்தவரை மறந்தான்; ஊரையும் மற்றவரையும் மறந்தான். அங்கே மலை மேற்கண்ட இலிங்கத்தை அன்றி மற்றையது ஒன்றும் அவனுக்குப் பொருளாகப் படவில்லை. பலர் சென்று அழைத்தும் மனம் திரும்பவில்லை. அந்த இலிங்கமே அவன் வாழ்வாய் முடிந்தது. இலிங்கத்துக்கு ஊறு உண்டானால், அதைத் தனக்கு உண்டானதாக நினைத்தான். அதன் கண்ணில் இரத்தம் வடியத் தன் கண்ணே இடந்து அப்பினன். ஆம்: அத்தகைய ஒன்றிய உணர்வோடு கடவுளைக் கண்டார் கண்ணப்பர் என்று பெரிய புராணம், அவர் வரலாற்றை எடுத்துரைக்கின்றது. கல்வி நலமே காணாத அந்தக் கண்ணப்பருக்கு ஒருமை உணர்வு உண்டாயிற்று என்றால், அது கலை நலத்தின் பாற்பட்டதே. எத்தனையோ கற்றவர்களைப் பாராட்டுகின்றார் சுந்தரர். வேத மொழியில் விற்பனர் பலர் போற்றப்படுகின்றனர். கலை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும்