பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

கவிதையும் வாழ்க்கையும்


 பிரிதலும், இருத்தலும், இரங்கலும், ஊடலும் அவ்வற்றின் நிமித்தங்களுமே ஒவ்வொரு நிலத்துக்கும் முறையே உரிமையாகி நிற்கின்றன; பொருளாகின்றன. கருப்பொருள் என்பன, அந்தந்த நிலத்திலும் நிலத்து மக்கள் உள்ளத்திலும் கருவாகி உருப்பெற்று நிலத்தோடு நிலமாக நிற்கும் பொருள்கள் ஆகின்றன. ஒவ்வொரு நிலத்தும், ஆண்டே பிரிக்க முடியா வகையில் பெறப்பட்டமையின் அவை கருப்பொருளாயின போலும்! அவை இன்னின்ன என்பதைத் தொல்காப்பியர்,

'தெய்வம் உளுவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருஎன மொழிப.'

(அகத்: 20)

என்று சிலவற்றைக் கூறி, அவற்றைச் சார்ந்த பிற பொருள்களையும் கருவில் அடக்கி முடிக்கின்றார். பின்னர் வந்தவர்கள் சற்று விரிவாக்கி, கருப்பொருள்களைப் பதினான்கு என்று அறுதியிடுவார்கள். இன்னும் விரிப்பினும் விரிக்கலாம். இக் கருப் பொருள்களே கவிஞர்தம் கருத்துக்கு விருந்தாக அமைகின்றன. இவற்றின் அடிப்படையிலேதான், காதலர் சொல்ல முடியாத கருத்துக்களையெல்லாம் கவிஞர்கள் காட்டி விடுகின்றார்கள். எனவே, அகப்பொருட் பாடல்களுக்கெல்லாம் இம் முப்பொருள்களே நிலைக்கலன்களாய் அமைகின்றன. இவை எவ்வெவ்வாறு மனித வாழ்வை விளக்கும் கண்ணாடிகளென விளங்குகின்றன என்பதைப் பின்னர் ஆங்காங்கே கண்டுகொண்டே செல்லலாம்.

இனி, 'இவ்வகப்பொருளில் வரும் மக்கள் யாவர்?' என்ற வினா எழுமன்றோ? இன்பம் எல்லார்க்கும் பொது என்று தொல்காப்பியர் வகுத்துள்ளதை மேலே கண்டோம். எனவே, உள்ளத்தால் பெறும் இன்பத்தை அனைவரும் பெறுவர். அதில் தடை ஒன்றுமில்லை. எனினும், உலகியலோடு நாடக வழக்கும் கலந்து காவியம் செல்லும் நெறியில் இதற்கெனத் தலைவன் , தலைவி, பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய் போன்ற பலப்பல பாத்திரங்களைக் கவிஞன் துணைக்குக் கொண்டுள்ளான். எத்துணைப் பொதுவாக அமைந்த பொருளாயினும், அப் பொருளை எடுத்து விளக்கும்போது, அதை ஒருவர்மேல் சார்த்