பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

313


சிறுவர்ப் பயந்த செம்மலோரெனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி!' (அகம். 66)

என்று அத்தலைவி கூறும்போதுதான் என்ன பெருமிதம் எய்து கின்றாள்!

பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்று சொன்னுேம். ‘தமிழர் வாழ்க்கையில் இது என்ன?’ என்று கேட்கத் தோன்றும். இது தமிழர்தம் தலைநிமிர்ந்த வாழ்க்கையில் ஒரு மாசு என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பரத்தையில் பிரிவுதான் கற்பு வாழ்க்கையில் பெரிதும் இடம் கொள்ளுகிறது. ஊடலுக்குக் காரணமாக அமைவதும் இதுவே. இதை எப்படி வாழ்வில் புகுத்தினர்கள் என்பதை நாம் அறியோம். இன்னும் நம் நாட்டில் இன்றைய அரசாங்கத்தார் சட்டம் முதலியன கொண்டு வந்து தடுத்தபோதிலுங்கூட, இக்கொடு வாழ்க்கை அடியோடு தொலைந்தது என்று கூறமுடியாத வகையில், உள்ளதை நாம் அறிந்திருக்கிறோம். இடைக் காலத்தில் காவியம் பாடிய புலவர் பலர் இவ்வாழ்வையும் அப்பரத்தையர் வாழ் தெருவையும் பாடியுள்ளனர். நாம் இங்கே காணும் சங்க இலக்கியத்திலே இப்பரத்தையர் வாழ்வு பேசப்படுகின்றது. ஏன்? தொல்காப்பியத்திலும் இதற்கு இடமுண்டே இவ்வாழ்க்கை மக்களுக்கு ஏற்றதுதான? இதுவா தமிழர் வாழ்க்கை?' என்று கேட்கத் தோன்றும். ஆனல், சற்று ஆழ்ந்து நினைப்பின், இது தமிழர் நாட்டில் எப்படியோ வந்துவிட்டது என்பதும், இதை எந்தக் காலத்திலும் யாரும் போற்றவில்லை என்பதும் நன்கு புலனாகும். சங்க இலக்கியங்கள் பரத்தமை வாழ்வைப் புகழ்கின்றன என்று எங்காவது காட்ட முடியுமா? அதற்கு நேர் மாறாகப் பரத்தையுடன் வாழும் தலைவனை நேரடியாகவும், உள்ளுறை, இறைச்சிப் பொருள்கள் வாயிலாகவும் எத்தனை எத்தனை வகையில் இழித்தும் பழித்தும் கவிதைகள் யாத்துள்ளார்கள் புலவர்கள்! அவனை எருமையாக்கியும், வேறு வகையாகத் தாழ்த்தியும் பாடிய பாடல்கள் பல. எனவே இப்பரத்தமை வாழ்க்கை தமிழ் நாட்டில் இருந்த போதிலும், எந்தக்-க.வா.—20