பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

கவிதையும் வாழ்க்கையும்


குறளை மூன்று பாலாகப் பிரித்துள்ளனர். வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படுவன அறம், பொருள், இன்பம். இவற்றின் அடிப்படையிலேயே அப்பிரிவுகள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற பெயர்களையும் பெற்றுள்னன. ‘அகமும் புறமும்’ இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எக்காலத்துக்கும், எந் நாட்டினருக்கும், எச் சமயத்தவருக்கும், எல்லார்க்கும் இந்நூல் பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்பர். அதனுலேதான் சிற்சில குறட்பாக்களுக்குக் காலத்துக்கும் நிலைக்கும் ஏற்பப் புதுப்புது உரைகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. முன்னைப் புலவர் அவர் காலத்துக்கு ஏற்ப, வள்ளுவர் குறளுக்குப் பொருள் கொண்டனர். அவ்வுரைகளுள் சில இக்கால வாழ்க்கைக்கு ஒவ்வாதனவாய் இருக்கலாம். அதனல், வேறு சில நூல்களைப் போன்று இக்குறளையும் வேண்டாவென்று ஒதுக்க யாரும் முன் வரவில்லை. அதற்குப் பதிலாக, இதை ஏற்று, தம் காலத்துக்கும் கருத்துக்கும் ஏற்ற வகையில் புதுப்பொருள் புனையவே முன்னிற்பர். எனவே, யாருக்கும் இக்குறளை விட மனம் வாராது. தத்தமது கால, நாட்டு, சமய இயல்புகளுக்கு ஏற்ப உரை காணத்தக்க வகையில் — அவரவர் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கும் பொருள் கொள்ளும் வகையில் — இந்நூல் அமைவ தேைலயே இது சிறந்த நூலாய் வாழ்கின்றது. இந்நூலை ஆக்கிய திருவள்ளுவரும் சாதி, குலம், பிறப்பு என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்தவர். அவர் எக்குலத்தில் பிறந்தாரோ. நாமறியோம். எக்குலவாழ்வை மேற்கொண்டாரோ தெரியாது! எனினும் அவர் பிறந்து சிறக்க வாழ்ந்தார் என்பது உண்மை. அவர் பற்றியும் குலம் முதலிய பற்றியும் ஒன்றும் தெரியாதிருப்பதும், அவர் நூலைப் பொது நூலாக்கிச் சிறப்பிக்க உதவுகின்றது. ஆம்! அப்படிச் சிறந்ததெனக் கூறும் வகையில் இந்நூல் எவ்வாறு வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகின்றது? அதைத் தொடர்ந்து காண்போம்.

ஆறறிவு படைத்த மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையினை வள்ளுவர் திட்டவட்டமாக வரைமுறை செய்துள்ளார்.