பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

கவிதையும் வாழ்க்கையும்


-வர் இருந்திருப்பராயின், இவர் குறளைக் கண்டுதான், அவர் தம் இலக்கணத்தை இயற்றினர் என்றுகூடச் சொல்லிவிடுவர்.அவர் காலம் அறிந்தமையின், அவ்வாறு கூறமுடியாது. மிகக் குறைந் அளவில் இருபத்தைந்து அதிகாரங்களிலே முந்நூறு அடிகளுள்ளே—சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள் அத்தனையும்ஆராய்ந்து அலசி எழுதிய எல்லா அகப்பொருளின் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக, வள்ளுவர். வாழ்க்கைக்குப் பொருந்தும் வகையில் காட்டியுள்ளார் குறளில் எந்தச் சொல்லையும் நீக்க முடியாத அளவுக்கு வாழ்வின் பொருளைச் செருகித் தம் கவிதையை யாத்துள்ள வள்ளுவர்; யாவராயினும், எக்குலத்த வராயினும், அவர் தமிழராய்ப் பிறந்த இந்நாடு சிறந்த தன்றோ! இனி அவர் கவிதைகளின் வழித் தனித்தனி ஆராய்வோம்.

அவர் முதலாவதாக வாழ்க்கைக்கு இன்றியமையாததான கடவுள் நெறியைக் காட்டுகின்றார். உலகம் அவர் கண்முன் நிற்கின்றது. அதற்காகத்தானே அவர் அறம் கூறப் புகுந்தார்? “ஆதி பகவன் முதற்றே உலகு.” என்றே தம் நூலைத் தொடங்குகின்றார், ‘ஆதி பகவன்’ என்ற தொடருக்கு யார் என்ன பொருள் கண்டாலும், ஒருவரும், இக்குறள் இன்றைக்குத் தேவையானது அன்று என்று கூறார். மேலும், ‘கடவுள் வாழ்த்து' என்று வரும் பத்துப் பாடல்களிலும், எந்தச் சமயத்தைச் சார்ந்த கடவுளரைப் பற்றியும் பாராட்டா திருப்பதே இந்நூலுக்குத் தனிப்பெருமை தருகின்றது. 'தன் தெய்வம் என் தெய்வம்' என்று தட்டுத்தடுமாறி உலகில் அன்று முதல் இன்றுவரை சமயத்தின் பேரால் எத்துணைப் போர்கள் நடை பெற்றுள்ளன! ஏன்? நம் பரந்த நாடே சமயத்தின் பேரால்தானே இரண்டாக்கப்பட்டது. இந்த வேறுபாட்டு மனப் பான்மைக்குச் சிறிதும் மனிதன் கொடுக்கக்கூடாது என்பதைக் காட்டவே, வள்ளுவர் தம் கடவுள் வாழ்த்தில் எந்தக் கடவுளையும் ஏற்றம் தந்து பாராட்டவில்லை. அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் கடவுளைத்தான் அவர் கூறுகிறார் என்று. ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு வகையில் உரைகண்டு இந் நூலையே தத்தம் சமயத்துக்கு ஏற்ற