பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

359


கூராது’, என்று படிக்கும்போது, ‘அத்தகைய அமுத சுரபி ஒன்று இன்று இருக்கலாகாதா!' என்று எண்ணுபவர் பலர் உண்டே! எனவே, இந்தச் சோற்றின் இன்றியமையாமையே மணிமேகலையை வாழ வைக்கின்றது. இது நிற்க,

அதை உபயோகிப்பதன் மூலம், தன் தாய்க் கதையாம் சிலம்பினை ஒத்து அதுவும் கற்பு நெறியைக் காட்டுகின்றது. காய சண்டிகை என்னும் கந்தருவப் பெண்ணின் மூலம் ஆதிரையின் கற்பை ஆசிரியர் சாத்தனர் எடுத்துக் காட்டுகின்றர். அவள் மணிமேகலைக்குச் சோறிட்டாள். ஆனல், ஆசிரியர் அதை வெறுஞ்சோறு என்று கூறவில்லை. கூறியிருந்தால், ஒருவேளை கவிதை சிறந்திராது; ஏன்? வாழ்ந்துமிராது. அதை ‘ஆருயிர் மருந்து' என்கின்றார். உணவு, உயிர் அனைத்துக்கும் மருந்தாய் அமைந்து, அவ்வுயிர் நெடிது வாழ வழி காணும் ஒன்றல்லவா!

'பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்து.'

என்கின்றார் அவர். ஆம். அவள் வாய் மூடிச் சோறு படைக்கவில்லை. அவ்வாறு தான் சோறிடுவதால் உலகம் முழுதும் பசிப்பிணி நீங்கவேண்டும் என்பது அவள் ஆசை. அந்த ஆசை நிறைவேறுகின்றது. மணிமேகலை அவ்வமுதசுரபியைக் கையில் கொண்டு பஞ்சம் உண்டாகும் இடத்திற்கெல்லாம் விரைந்து சென்று, பசிப்பிணியைப் போக்கினுள் என்று காண்கின்றோம். ஆகவே, ஆதிரையின் செயலால் அவனி வாழ்ந்தது.

சோற்றினைச் சாத்தனார் ஆருயிர் மருந்து என்று வழங்குகின்றார். காரணம் என்ன? 'சோற்றால் உயிரா வளர்கின்றது? உடல்தானே வளர்கின்றது?’ என்று வாதிப்பவரும் சிலர் உளர். ஆனால், உயிர் வளர்கின்றது என்பதை மேலே நாம் கண்டோம். உடலொடு பொருந்திய உயிரின் வளர்ச்சியையே ஆங்கிலத்தில் ‘Evolution’ என்கின்றனர். எனவே, உடல் வளர்வதைப் போன்றே. உயிரும் வளர்ச்சியுறுவது என்பது ஆராய்ச்சியாளர் கண்ட உண்மை. ஆனால், உடல் நிலை கெட்டோ, மாறியோ.