பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

கவிதையும் வாழ்க்கையும்



முறைதான் அக்கவிதைகள் வாழ்வோடு பொருந்தின வகையை விளக்குகின்றன.
ஒரு பொருளிடத்து நாம் பற்று வைப்போமாயின், அப்பொருளுக்கு நம்மால் செய்யக்கூடிய அத்துணைச் சிறப்பையும் செய்து விடுவோம். ஒருவரிடம் நாம் பற்றுக்கொண்டால் நம்மை மறந்து நம் பொருள் அனைத்தையும் அவருக்கு ஈடாக்குவோம். அந்தப் பற்று, சில சமயங்களில் வெறியாக மாறுவதும் உண்டு. அந்த நிலையில் நாம் செய்வது சரியா தவறா என்ற ஆராய்ச்சிகூடச் செல்லாது. நாம் செய்யும் காரியம் மக்கள் இனத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதா அன்றா என்றுகூட எண்ணத் தோன்றாது. அந்த நிலையில் வாழ்ந்த அடியவர் சிலர் தம்மை மறந்து, மக்கள் செய்ய முடியாத - ஏன் செய்யக் கூடாத செயல்களையுங்கூடச் செய்துள்ளார்கள். அவர்களுள் ஒர் அடியவரைப் பற்றித்தான் மக்கள் பல்வேறு வகையில் குறை கூறுகின்றார்கள். என்னதான் பற்றுக்கொண்டாலும், கொண்ட மனைவியை ஓர் அடியவர் பின்னே அனுப்புதல் தவறு தானே?’ என்பது வாதம். தவறு இல்லை என்று யாரும். எக்காலத்திலும் சொல்லவில்லை. சாதாரண மனிதர்கள் செய்யத்தகாத் செயல்தான் அது. இல்லை என்று மறுப்பார் யாரும் இல்லை. இன்று அவர் செயல் தவறு என்று பேசுகின்றவர் பலர் உள்ளனர். ஆனால், கொடுத்த அன்றும் உடன் இருந்த அனைவரும் இச்செயலைத் தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லை. அதற்கு தேர் மாறாகப் பழித்ததோடு, நாங்கள் உயிருடன் இருக்கும் வரையில் இந்தச் செயலைக் கண்டு சகியோம்!' என்று போரிட்டு மடியவும் புறப்பட்டார்கள். அவர்தம் உள்ள நெகிழ்ச்சியை,

"ஏட!நீ என்செய் தாயால்?
      இத்திறம் இயம்பு கின்ருய்;
நாடுறு பழியும் ஒன்னர்
      நகையையும் நாணுய்; இன்று
பாடவம் உரைப்ப துன்றன்
      மனைவியைப் பனவற்கு ஈந்தோ?