பக்கம்:கவிதை உள்ளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறு பிரபந்தங்கள்



போக்கும் வழியற்றுப் புண்ணியனே உன்னடியே
ஆக்கும் பொருளாய் அவாவிடுவன் - நீக்கமிலா

நல்லறிஞர் தம்முறவை நாடி உனைப்புகழ்வார்
இல்லந் தொறுஞ்சென்று ஏங்கிநிற்பபன் - பல்வளமும்

பெற்ற திருத்தணிகைப் பெம்மான்பெம் மானென்று
உற்ற விடத்தெங்கும் ஓதிடுவன் - பற்றிநின்ற

உந்தன் இளங்குமரன் உந்தன் அருமைந்தன்
உந்தன் அருங்கொழுந்து ஓர்ந்திடுவாய் - நன்றென்றே

அத்தணிகை மன்னவர்க்கு ஆக்கந்தரு வளியே
உற்றே உரைப்பாய் உவந்திடுவான் - பற்றில்லான்

உந்தன் நலங்காப்பான் ஓடிவந்து காத்துஎனைச்
சொந்தமென ஒன்றாக்கித் தூய்மை செய்வன் இந்தநிலை

வேண்டி உனைவிடுத்தேன் வேகந் தனிற்சென்று
ஆண்டே தணிகைவரை அண்டியே - யாண்டும்

மயில்வா கனனாக மன்னும்என் தந்தை
அயல்நின்று அவ்வா றறமே - நியதியுடன்

சொல்ல அனுப்பினான் என்றேநீ தூமனத்தே
வல்லவகை தூதுசொல்லி வா.*



 

  • (1940) விக்கிரம ஆண்டு ஆனி 16-ல் தணிகை முருகன் அருள் வேட்டுப் பாடியது.

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/43&oldid=1389202" இலிருந்து மீள்விக்கப்பட்டது