பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னுடைய குடும்ப நலன், தன்னுடைய முன்னேற்றம்னு இருக்கற போதே, அவன் ஓர் அறிவு ஜீவியாகவுமிருந்து வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டத்திலிருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய அனுபவங்கள்தான், ஒரு மனிதன் எந்தத் துறையில் அதிகமா ஈடுபாடு காட்டறானோ அந்தத் துறையிலே உருவாக்கிப்பிரகாசிக்க வைக்கிறது. அவன் சார்ந்த, அவனுக்கு ஈடுபாடுள்ள அந்தத் துறையில் அவனது அனுபவம் வெளிப்பாடாகிறது. கவிஞனா யிருக்கிறவன் ஒவ்வொருவனுக்கும் அவனது அனுபவமே முதலாக இருக்கிறது. படைப்புத் தொழிலை அவனால் இதன் மூலம் செய்ய முடிகிறது. ஒர் ஆசிரியன் பாடம் சொல்லித் தர்றது மாதிரி கவிதை எழுதறது எப்படின்னு மத்தவங்களுக்கு எப்படிக் கற்றுக் கொடுக்க முடியும்? தான் படைத்த படைப்புகளின் மூலமாகத்தான் இதுதான் கவிதை... இப்படித்தான் எழுதவேண்டும் என்று கவிஞன் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கிறான். பாலா: கவிதையில் இயல்பான ஈடுபாடு இருந்தால் போதும், அவன் கவிஞனா மாற வாய்ப்பிருக்கு என்கிறீர்கள். கடந்த கால் நூற்றாண்டுக் காலமா புகழ் பெற்ற கவிஞர் நீங்கள். கவிஞனாக மாறியதாக நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? மீரா: சமூகத்தில் எப்போது அங்கீகாரம் கிடைக்கிறதோ அதை வைத்துதான் ஒருவன் கவிஞனாகியுள்ளான் என்று முடிவு செய்ய முடியும். I0