பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெக்னிக்கை தற்காலச் சூழலுக்கேற்ப செய்திருப்பது தான் வரவேற்கத்தக்க விஷயம். மீரா: இன்றைக்குக்கவிதை எழுதுகிற இளைஞர்கள் இதைத்தான்கற்றுக்கொள்ள வேண்டும். எனது கவிதை களையாராவது ஆராய்ச்சி நோக்கத்தோடு பார்ப்பவர்கள் இதன்வேர்கள் பழைய மரபிலிருப்பத்தைத் தான்காண முடியும். இதைத்தான் கவிஞன் கொள்ளவேண்டுமே தவிர நேரடியாகக் கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தந்துவிட முடியாது. அன்றைக்கு ஒரு பெண்ணின் பார்வை அம்பு போலிருந்தது என்று சொன்னால் இன்று எழுதக்கூடிய கவிஞன் அதையே ஒரு பென்சிலின் கூர்முனை என்கிறான். அந்தப் பெண்ணின் உடல் பஞ்சு மாதிரி என்பது பழைய உவமை. இன்றைக்கு எழுதுகிறான் அது ரப்பரின் மென்மையடி!' என்கிறான். பென்சில் ரப்பர் இவையெல்லாம் சாதாரணமாக பழக்கப்பட்ட பொருட்கள். இவற்றை வைத்து இன்றைக்கு உவமை களாகச் சொல்கிறான் என்றால் இது பழைய மரபின் அடிப்படையில் எழுந்ததுதான். பழைய மரபையும் விட்டுவிட முடியாது. ஆனால் புதிதாகச் சிந்தனை வேண்டும். பாலா: கவிதையில் புத்துணர்ச்சி வேண்டும். சொல்கிறபோது புதிதாக உணரவேண்டும். படிக்கிறவன் அதைப் புதிதாக உணரவேண்டும். இரா.வே.: ஹைகூ கவிதைகள் தற்போது தமிழ்நாட்டில் பலரும் எழுத முயற்சித்துக் 43