பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9 கவிதையை மனப்பாடம் செய்தல் மனப்பாடம் செய்தல் கெட்டுருச் செய்தல்’ என்றும் வழங்கப்பெறும். கவிதை பயிற்றலில் மனப்பாடம் செய்தல் ஒரு முக்கியக் கூறு: கருத்து வேறுபாடுள்ள ஒரு துறை. சாதாரண பாகப் பள்ளிகளில் மாணாக்கர்களைப் பாடல்களை மனப்பாடம் செய்யும்படி கட்டாயப்படுத்துவதால், அவர்கள் கவிதையைக் கற்றலில் வெறுப்புக் காட்டுவது நடைமுறையில் காணும் ஒர் உண்மையாகும். இம்முறையில் கல்வி கற்று வளர்ந்தவர்களும் இன்று கவிதைளைக் காணுங்கால் பாலைக்கண்ட தெனாலி ராமனின் பூனைபோல் மிரளுவதைக் காணலாம். செஞ்சொற் கவியின்பத்தில் திளைக்கமுடியாமல் மிரளும் அவர்களைக் கண்டு நாம் இரங்குவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? இந் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கவிதைகளை மனப் பாடம் செய்வதை எந்த அளவில் மேற்கொள்ளலாம்? எவ்வாறு அதை நடைமுறையில் வற்புறுத்தலாம்? கவிதையை நெட்டுருச் செய்வது பற்றிய உளவியல் உண்மைகள் யாவை? எத்தகைய கவிதைகளை நெட்டுருச் செய்தல் வேண்டும்? என்பன போன்ற செய்திகளை ஒரளவு ஆய்தல் ஈண்டு இன்றியமையாததா கின்றது. கெட்டுருச்செய்தலின் அவசியம்: கவிதைகளை நெட்டுருச் செய்தலின் இன்றியமையாமை குறித்துப் பல காரணங்கள் கூறப்பெறுகின்றன. பொருளுணர்ந்து மனப்பாடம் செய்யப் பெற்ற பகுதிகளிலுள்ள அழகும் அவற்றைத் துய்த்தலால் வளரும் நுண்ணறிவும் என்றும் உள்ளத்தில் நிலைத்த இடத்தைப் பெறும். அவற்றிலுள்ள அறிவுரைகளும் அறவுரைகளும் அவ் வாறே நிலைத்திருந்து நம்மை நன்னெறிக்கண் உய்க்கும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’, என்ற முதுமொழி இதனாலன்றே எழுந்தது? பல பாடல்கள் நினைவிலிருந்தால் தான் பல நூல்களிலுள்ள ஒப்புமைப் பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கமுடியும்; அவற்றின் ஏற்றத் தாழ்வுகளை, குறைவு நிறைவுகளை ஆராய்ந்து பார்த்தல் இயலும். பல பாடல்களைக் படித்து மனத்தில் அமைந்திருந்ததால்தான் டாக்டர் உ.வே. சாமி நாதய்யர் அவர்கள் பதிப்பித்த குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு பாடலின் கீழும் பிற இலக்கியங்