பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் 1Ꭰ 5 என்ற மகாகாளியின் புகழைப் பாடும் காவடிச்சிந்தில் கொண்டு. வண்டு, கண்டு, பண்டு என்ற அடியின் ஒலிப்பை மாணாக்கர்கள் நன்கு அறிந்துகொண்டால் போதுமானது. அந்த ஒலிப்பிலேயே அவர்கள் எல்லையற்ற இன்பம் அடைவர். அடிகளின் இறுதி யிலேயன்றி இடையிலும் இந்த ஒலியமைப்புத் திரும்பத் திரும்ப அமையும் பாடல்களும் உண்டு. பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்) தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்) என்ற பாரதியாரின் பாட்டில் ஒவ்வொரு வரியிலும் லே’ என்ற ஒவி, நயமாக அமைந்திருப்பதைக் கேட்டு மகிழலாம். சிறுவர்கள் இத்தகைய பாடல்களைக் குரல்விட்டுப் பாடும்பொழுது மிக்கக் களிப்படைவர், இத்தகைய எளிய சந்தம் மிக்க பாடல்களைச் சிறுவர்கள் படித்து அநுபவிப்பதற்கு ஆசிரியர்கள் அதிக வாய்ப்பு கள் தருதல் வேண்டும். நடுநிலைப் பள்ளியில் படிப்போரும், உயர்நிலைப் பள்ளியில் படிப்போரும் மேற்கூறிய பாடல்களைப் போன்ற பாடல்களைப் படித்து மகிழலாம். மேலும், அவர்கள் வெண்பா, ஆசிரியப்பா, அறுசீர்விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற செய்யுள் வகைகளைப் படிக்கும் அநுபவம் பெற்றிருப்பர். ஆசிரி யர் நன்முறையில் கவிதைகளைப் பயிற்றியிருப்பாராயின் அவர்கள் செப்பலோசை, அகவலோசை போன்ற ஒசை வேறுபாடுகளை நன்கு அறிவர். வெண்பாவைச் சங்கராபரண இராகத்திலும் விருத்தத்தைக் காம்போதி, கல்யாணி, மத்யாமவதி என்ற இராகங்களிலும், பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் கேதாரக் கெளளத்திலும் பாடும்பொழுது அந்தந்த இராகங்களைப்பற்றி 8. பாரதியார் கவிதைகள் . பாரத நாடு-1, 2. க-14