பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு யோசனைகள் f I1 அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்என்பது உம்' போன்ற நிலையான உண்மைகளின்முன் நாம் தலை வணங்கு வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இலை மட்டிலும் சிறந்தவை என்பதில்லை. அவர்கள் எத்தனையோ உயர்ந்த கருத்துகளை எண்ணியிருந்திருக்கலாம். ஒன்றிரண்டு மட்டிலும் தான் சொல் வடிவம் பெற்று வெளிபட்டிருக்கலாம். ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞர் கூறியது ஈண்டு சிந்திக்கற்பாவது: 'கவிஞனின் படைப்பு எழுத்து வடிவம் பெறும்பொழுது, அகத் தெழுச்சி (inspiration) ஏற்கெனவே தாழ்ந்து விடுகின்றது: இவ்வுலகத்திற்குக் கிடைக்கும் மிகச் சிறந்த கதையும் கவிஞனின் புதுப்போக்குடைய கருத்துகளின் வலியிழந்த நிலையாகும்.' 12 எனவே, கவிஞனை அவனுடைய பாடல்களிலேயே காணும் வாய்ப்புகளை நாம் சிறுவர்கட்கு நல்குதல் வேண்டும். 3. திறனாய்தல்: நாம் எதைப் படித்தாலும் அதனைத் திறனாய்த்தே உணர்கின்றோம். இத்தகைய திறனாய்தல் திறன் மாணாக்கர்களிடமும் வளரவேண்டும்; ஆசிரியர்கள் அதற்கேற்ற வாய்ப்புகளை நல்குதல் ேவ ண் டு ம். சாதாரணமாகத் 'திறனாய்தல்’ என்பது தவறாகவே உணரப்பெறுகின்றது: தொடக்கத்திலிருந்தே ஆசிரியர் மாணாக்கர்களிடம் கவிதை களைத் திறனாய்பவரின் உண்மையான செயல், அவற்றில் அழகையும் உண்மையையும் காண்பதேயாகும் என்பதைத் தெளி வாக்கி விடுதல் வேண்டும். கவிதையாயினும் வாழ்க்கையாயினும் திறனாய்வாளனுக்கு ஒரே ஒரு கடமை-ஒரு குறிக்கோள்உண்டு; அதில் அழகையும் உண்மையையும் காண்பதே அது. மாணாக்கரோ ஆசிரியரோ இதை உணர்வதைவிட வேறு என்ன சிறந்த படிப்பினையைப் பெறுதல் கூடும்? சில சமயம் திறனாய் வாளன், குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்; ஆனால், அவ்வாறு செய்வது குறைகாண்பதில்தான் கொண்டுள்ள காதலால் அன்று என்றும், உண்மையின்மீது தான் கொண்டுள்ள காதல் காரணமாகவே அவ்வாறு செய்வதாகவும் நாம் உணரவேண்டும். அழகின் நடுவே காணப்பெறும் உண்மை தான் பொலிவுடன் திகழும் என்பதை நாம் வற்புறுத்த வேண்டிய தில்லை, குறை காண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளவர், 11. சிலப்பதிகாரம்: பதிகம்-வரி 55.57. 12. She Hey: Defence of Poetry,