பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி 17 பற்றிக் குறைத்துப் பேசுவதாகும். இது பள்ளிகள் தம் பணியைச் செவ்வனே ஆற்றவில்லை என்பதாகின்றது. அப்படியே இஃது உண்மையாக இருந்தாலும், அதனால் என்ன? சிறுவர்கள் நம் மிடம் இருக்கும்வரையிலும் கவிதை அவர்கட்க உயிர்க் களை தரும் அழகுணர் பொருளாக இருக்கட்டுமே..அவர்கள் நாடோறும் வளர்ந்து கொண்டுதானே இருக்கின்றனர்? துலக்கமுறுதல்' என்பது சிறுவர்களிடம் காணப்படுவதுதானே? கவிதை எந்த அளவுக்கு அவர்கட்குப் பயன் அளித்துள்ளது என்பதை யார் மதிப்பிட முடியும்? பள்ளி வாழ்க்கையின் பொழுது சிறுவன் கோடை விடுமுறையில் மலைக்காட்சிகளையும் கடற்காட்சிகளை யும் கண்டு களிக்கட்டும். பள்ளி வாழ்க்கை முடிந்ததும் அவன் பல்லாண்டுகள்-ஏன்? வாழ்க்கை முழுவதுமே - நகர வாழ்க்கையில் அடைபட்டுக் கிடப்பதாக வைத்துக் கொள்வோம். இதனால் அவன் மலைக் காட்சிகளையும் கடலலைகளின் ஓசையை யும் என்றாவது மறக்க முடியுமா? இளமைப் பருவத்தில் இவை அவனிடம் விடுதலை யுணர்ச்சியையும் களிப்பையும் எழுப்பின. இவை புதுமையையும் துணிவையும் அவனுக்குத் தந்தன. விழுமிய கருத்தையும் புலன்களுக்கு எட்டாத மர்மத்தையும் அவை உணர்த் தின: இவற்றால் அவனுடைய சால்பு உருவம் பெற்றது. ஆகவே, அவை என்றும் அவனிடம் வாழும். இங்கனமே, இளமையில் முறைப்படிப் பெற்று வளர்த்த கவிதையநுபவமும் அவனிடம் என்றும் வாழும்; நிலைத்து நிற்கும். ஆசிரியர் தாம் உயிரோடிலங் கும் வளரும் சிறுவர்களிடம் புழங்கிக் கொண்டிருப்பதாகமட்டி லும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது. வாழ்வு வாழ்வையே தரும்; சாவு சாவையே நல்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. நீலமா மஞ்ஞை ஏங்க நிறைகொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லைக் கோபம் வாய் முறுவல் காட்ட ஆலுமின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீ டரங்கில் ஆடக் காரெனும் பருவ நல்லாள்.' என்ற சேக்கிழாரின் கார்கால் ஒவியத்தை இளமையில் பயின்ற 11 gož sopp 5 d-Development 12. பெரியபுரா ஆனாயர்- 19 - க-3