உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைத் தேர்ந்தெடுத்தல் 33 திறனைப் பெற்றாலும் நமக்கும் ஒர் எல்லையுண்டு அல்லவா? இந்த எல்லைதான் நம்முடைய திரட்டு நூலை வரையறை செய்கின்றது. ஓர் எல்லைக் கோட்டினுள் அடக்குகின்றது. எனவே, நம் உள்ளத்தைக் கவரும் கவிதை யொன்றினைத் தேர்ந் தெடுக்க வேணடுமாயின், நம்முடைய திரட்டு நூலைத்தான் புரட்ட வேண்டும். பள்ளியில் ஒரு மாணாக்கன் தக்க முறையில் கற்பிக்கப்பெற்றால், அவன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியை அடைவதற்கு முன், ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை வைத்திருப் பான். இன்றைய அவலநிலை: ஆனால், இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிலவும் அவலநிலை என்ன?, கவிதை பயிற்றல் நேரான வழியில் செல்வதில்லை. அது தேர்வுகளின் நிமித்தமே நடைபெற்று வருகின்றது, மாணாக்கர்கள் கவிதையைப்பற்றிய தம்முடைய சுவையில் அதிகமாக நம்பிக்கை கொள்ள முடிகின்ற தில்லை. மாணாக்கர்கள் ஒரு கவிஞனைப்பற்றிய திறனாய்வு வினாவிற்கு விடையளிக்க முடியும். ஆனால், அக்கவிஞனுடைய கவிதைகளிலிருந்து தாம் படித்துச் சுவைத்த, தமக்குப் பிரிய மான, கவிதைகளை மேற்கோள்களாகக் காட்ட முடிகின்ற தில்லை. பெரும்பாலான மாணாக்கர்கள் ஒரு பெருங் கவிஞனு டைய கவிதைகளை விட அக்கவிஞனைப்பற்றி யாரோ எழுதி வெளியிட்ட திறனாய்வு உரையையே நன்கு அறிந்தவர்களா யுள்ளனர். தேர்வு முறையே இத்தகைய அவல நிலைக்குக் காரணம் என்று சொல்லவேண்டும். தேர்வு பிரச்சினைப்பற்றி இங்கு ஆராயத் துணிவது மற்றொன்று விரித்தலில் கொண்டு செலுத்திவிடும். தேர்வுகளைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் அவற்றை வெறுக்கத்தான் செய்கின்றனர். தேர்வினைக் கொண்டு மதிப்பிடப் பெற்றவர் பெரும்பாலும் புலவர்' என்று கருதப்பெறும் நிலையில் இல்லாததை நாம் காணாமல் இல்லை. ஆனால், அதுதான் இன்றைய உலகம்; எப்படியோ முதல் வகுப் பில் தேர்ச்சி பெற்றுவிட்டார் என்றால் அவர்தான் தமிழறிஞர்'; அங்ங்ணமே, எப்படியோ பெரிய பதவியிலிருக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், அவரும் தமிழறிஞராகவே கருதப்பெறு கின்றார். அறிவியல் துறையிலோ கணிதத் துறையிலோ ஒரு வருக்கு இவ்வாய்ப்பு ஏற்பட்டால், அவர் உண்மை நிலை விரை வில் வெளிப்பட்டுவிடும்; தமிழ்த்துறையில் உண்மைநிலை வெளி படாமலேயே தம்முடைய காலம் முழுவதையும் ஒட்டி விட லாம்!