பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அறிமுகம் 慧及 துணை செய்யாது போகவும் செய்யலாம். இன்று கையாளப் பெறும் முறைகள் யாவும் இவ்விரண்டையும் தவறாது செய்கின் றன என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பான்மையான தமி ழாசிரியர்கள் மேற்கொள்ளும் முறைகள் இப்பலன்களைத்தான் தருகின்றன. நடைமுறையில் மேற்கொள்ளப்பெறும் ஒரு சில முறைகளை ஈண்டு நோக்குவோம்; கவிஞர் வரலாறு கூறும்முறை: சிலர் கவிதைகளை யாத்த கவி ஞனின் வரலாற்றைக் கூறிப் பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கு கின்றனர். பாடப் பகுதியாக அமைந்துள்ள பாடல்களை எழுது வதற்குக் கவிஞனுக்கு நேரிட்ட சூழ்நிலையைச் கூறிப் பாடல் களைக் கற்பித்தல் இம்முறையின் அடிப்படையான நோக்க மாகும். மாணாக்கர்கள் அறிந்துள்ள கவிதைகளைக் கற்பிக்க நேரிடுங்கால் இம்முறை பெரிதும் பயன்படும்; அப்பொழுதுதான் அவர்கள் கவிதைகளை யாத்த கவிஞனைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வங் காட்டுவர். இம்மாதிரியான நிலை ஏற்படுங் கால், முதலில் கவிதையை அறிமுகம் செய்து கற்பித்தால் மாணாக்கர்களிடம் இயல்பாக அக்கவிதைகளைப் பாடிய கவி ஞனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழும்; அவர்கள் ஆர்வத்தை அறிந்து, கவிஞனின் வரலாற்றைக் கூறி னால்,அஃது அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும்; கவிதைகளின் விளக்கமும் தெளிவாகப் புலனாகும். ஆனால், ஒன்று நினைவிலிருத்த வேண்டியது மிகவும் இன்றி யமையாதது. கவிஞனின் வரலாறு கூறுவது கவிதையைக் கற்பித் தல் ஆகாது. கவிஞனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி முதலிய செய்தி களைக் கூறுவதால் யாதொரு பயனும் விளையாது. அவற்றை அறிவதால் கவிதைகளுக்கு விளக்கம் ஏற்படுமானால், அல்லது கவிதைகளைத் துய்க்கும்போது இன்பம் பயக்க அவை துணை புரியக் கூடுமானால், அச்செய்திகளைக் கூறலாம். அப்படி பொன்றும் ஏற்படாது என்பதை அறிந்தால். இச்செய்திகளைக் கூறவேண்டிய அவசியமே இல்லை. கீழ்க்காணும் பாடல் ஐந்தாம் படிவத்திற்குப் பாடமாக வந்துள்ளது எனக் கொள்வோம். இவ்வே , பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுடை வியன் நக ரவ்வே, அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து