பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை அறிமுகம் 39 களிடம் உண்டுபண்ண விழைந்தால், கவிதையை முழு வடிவமாக அவர்கட்குக் காட்டாது யாங்கனம் அதை நிறைவேற்ற முடி யும்? உள்ளங்கவர் கவிதைகளை மாணாக்கர்களின் உள்ளத்தைக் கவருமாறு செய்வதே ஆசிரியரின் தலையாய கடமையாகும். கவிதையை உணரச் செய்வதுதான் ஆசிரியரின் நோக்கமாக இருக்கவேண்டுமன்றி அறியச் செய்வது அன்று; அழகுக் கலையை விழையும் ஆற்றலை வளர்த்து அதை ஈடுபாட்டுடன் துய்த்த லால்தான் அவ்விழைவை மிகுவிக்க முடியும். இனி, கவிதையை அறிமுகம் செய்த பிறகு அதை எங்கனம் அவர்களிடையே படிப் பது என்பதை அடுத்துக் காண்போம்.