பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைப் படித்தல் 41 வாய்விட்டுப் படித்தல்: பழங்காலத்தில் கவிஞன் பாட்டைப் பாடியே கேட்போரை மகிழ்வித்தான். எங்குச் சென்றாலும் அவன் பெரு விருந்தினன்போல் வரவேற்கப்படுவான். நமது நாட்டில் மட்டிலுமல்ல; மேனாடுகளிலும் கவிஞனுக்கு இதே நிலைதான் இருந்தது. இன்று கவிஞன் பாடுவதில்லை; மக்களும் அவனைச் சரியாக மதிப்பதில்லை. இன்று கவிதைகள், அச்சிட்ட நூல்களில் மூங்கையர்போல் உறங்கிக் கிடக்கின்றன. அச்சுக் கலையால் பெரு நன்மைகள் விளைந்த போதிலும், அதன் வளர்ச்சி கவிதைகளை மூங்கையர்போல் இருக்கத் துணையும் செய்துவிட்டன என்று எண்ண வேண்டியுள்ளது. ஆனால், கூட்டங் கூட்டி யாரேனும் ஒருவர் கவிதைகளை உரக்கப் படிக் கும்போதுதான் கவிதைகள் புத்துயிர் பெற்றெழுகின்றன: கவிஞனே எழுந்து பேசுவது போலுள்ளது. கல்விக்கூடங்களில் உரக்கப் படிக்கும்போது இதே நிலையைக் காணலாம். சிறுவர் களும் இளைஞர்களும் கவிதை உலகத்திற்குப் புதியவர்கள். கவிதையிலுள்ள உயிர் நாடியை அவர்கள் அறியார்: அதிலுள்ள இசையின்பம் அவர்கட்குத் தட்டுப்படாது. அதை வாய்விட்டுப் படிக்கும்போதுதான் கவிதையினுள்ள ஓசை நலனை அவர்கள் حتتم معر அறிய முடிகின்றது; துய்க்கவும் முடிகின்றது. வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும் வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின் அடிபடு பொருளின் அடிபடும் ஒலியிற் கூடக் - களித் தாடுங்காளி, சாமுண்டி, கங்காளி: அன்னை, அன்னை ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை." என்ற பாரதியாரின் ஊழிக் கூத்தை வாய்க்குள் படித்தால் அந்த வீரக் கவிஞனின் ஆவேச உரையைக் கேட்க முடியுமா? அவன் உயிர்நாடியை உணரத்தான் முடியுமா? கவிைைதய உரக்கப் படிக்கும்போதன்றோ இயற்கையன்னையின் கோரத் தாண்டவம் நம் மனக்கண்முன் வந்து தோன்றுகின், கவிதையை முறைப்படி படித்தால் தமிழ்மொழியறியாத வேற்று 2 பாரதியார் கவிதைகள் ஊழிக்கூத்து