பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையைப் படித்தல் 45 ஒலிநயத்தின் சிறப்பு: ஒலிநயமே பாட்டின் உடல், ஒலியில் லாவிட்டால் பாட்டு ஏது? இலக்கணவழு இல்லாமல் கவிதையை இயற்றலாம். ஆனால், அது சிறந்த ஒசையுடன் அமைய வேண்டும் என்ற வரையம்ை இல்லை. ஒசை தருதல் கவிஞனின் திறனைப் பொறுத்தது; ஓசை வேறுபாட்டால் பொருளைத் தெளிவாக்கலும் அவனது வன்மையைப்பற்றியதே. எனவே, பாடல்களை நல்ல முறையில் படித்தால் அவற்றின் உயர்ந்த ஒலி யமைப்புக் கேட்போரின் செவிப்புலனை எளிதில் கவர்ந்துவிடும். ஒலியின் பத்தில் மாணாக்கர்களின் உள்ளம் ஒன்றினால்தான். கருத்தின்பத்தை அவர்கள் சிறந்த முறையில் பெற இயலும். ஏற் கெனவே காலடிச்சிந்தின் ஒலிநயத்தை ஒன்றிரண்டு முறை அதுப வித்த உள்ளம் எவ்வளவு பரபரப்பான வேலையில் ஈடுபட்டிருந் தாலும் மீண்டும் அவ்வொலிநயத்தைக் கேட்க நேரிடுங்கால், வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பரபரப்பைக் குறைத்து விடுதலே இதற்குச் சான்றாகும். வேறு சான்றுகளும் உள்ளன. எதையோ எண்ணிப் பிடிவாதம் செய்து அழும் குழந்தை அன்னையின் தாலாட்டைக் கேட்டு உறங்கிவிடுகின்றது; விரைந்தோடும் பாம்பு இன்னோசையைக் கேட்டதும் வேகத்தைத் தணித்துக்கொண்டு சுருண்டு அமைதி பெறுகின்றது. பறவைகளும் விலங்குகளும் இசையில் மனத்தைப் பறிகொடுக்கின்றன. யோகியர் உள்ளத்தை யும் இன்னிசை கவர்ந்து விடுகின்றது. செவியின் நுண்ணுணர்வு: செவி மிகவும் நுட்பமாக அமைந்த பொறி. நரம்புகளின் மென்மைக்கு ஒர் எல்லையாகவும் அமைந் துள்ளது. செவி நரம்புகள் உடம் பின் ஏனைய நரம்புகளையும் ஆட்டிவைக்கும் வன்மையைப் பெற்றுள்ளது. மேளக் கச்சேரி யைக் கேட்போரில் இசையறிவு இல்லாதவர்களும் பாட்டின் இசைக் கேற்றவாறு கைத் தாளம் போடுவதைக் காண்கின்றோம். வெகு தூரத்திலுள்ள பறையொலியைக் கேட்டதும் சாளரத்தின் அருகில் நின்றுகொண்டிருக்கும் சிறுவனின் கைகால்கள் தாமாக ஆடுகின்றன. செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கும் நாமும் வானொலிப் பாட்டைக் கேட்டதும் நம்மை அறியாமல் கைத்தாளம் போடத் தொடங்குகின்றோம்; இவ்வாறு ஒலிநயம் செவிப்புலனைக் கவர்ந்து உடலையே ஆட்டிவைப்பதற்கு எண் ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே, கற்பிக்கும் ஆசிரி யர் பாட்டுகளைப் பன்முறை இசையுடன் பாடுங்கால், மாணாக் கரின் உள்ளம் அவற்றுடன் ஒன்றிவிடும் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. திருவாசகப் பாக்களைக் கசிந்துருகிப் பாடிய இராமலிங்க அடிகள் தம் அநுபவத்தை,