பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-7 கவிதையை வாய்விட்டுப் படித்தல் சென்ற் இயலில் சிறுவர்கள் பாடல்களை ஏன் வாய்விட்டுப் படிக்கவேண்டும்? என்பதுபற்றிக் குறிப்பிட்டோம். நாம் ஒரு பாட்டை ஒருவர் பாடக் கேட்கும்பொழுது, அதை நாம் திரும்ப வும் மெல்ல ஒலித்து மகிழ்ச்சி அடைவதில்லையா? "வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்-என் உள்ளங் குழையுதடி-கிளியே ஊனும் உருகு தடி’ என்ற டி. கே. பட்டம்மாள் பாடிய பாட்டைக் 'கிராமஃபோன் தட்டு மூலம் கேட்கும்பொழுது மேற்குறிப்பிட்ட அநுபவத்தை அடைகின்றோம். அங்ங்ணமே, அனைத்திந்திய வானொலியில் *குரல்வகை"யில் நமக்குப் பிடித்தமான சிலவற்றைக் கேட்கும் பொழுது இவ்வதுபவம் அடிக்கடி ஏற்படுவதை நாம் அறிவோம். நாம் தனியாக இருக்கும்பொழுது அப்பாடல்களைச் சிலசமயம் வாய்விட்டுப் பாடியும் மகிழ்கின்றோம். அங்கனமே, கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள் பல வேதெ ரிந்து-மதனாலே கரியகுழன் மாதர் தங்கள் அடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து-மிகவாடி , என்ற திருப்புகழை யாரோ ஒருவர் எங்கோ தொலைவில் பாடிக் கொண்டு சென்றாலும், நாம் செய்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு அப்பாட்டை இன்பமாகக் கேட்டு மகிழ்கின்றோம். அப்பாட்டின் பொருள் விளங்காதவர்களும் அதன் ஒலிநயத்தில் ஈடுபட்டுக் களிப்புறுகின்றனர்.அப்பாடலைப் பாடாமல் வேறு சொற்களையும் வேறு கருத்துகளையும் அதே மெட்டில் (ஒலிவகையில்) அமைத்துப் பாடினால் அதே ஒலியின் பம் உண்டாகின்றது. அதனால்தான் வீணையொலியும் புல்லாங் குழல் ஒசையும், மோர்சிங், நாதசுர ஒலிகளும் நம் காதுக்கு இனிக் 1. அருணகிரிநாதர் - திருப்புகழ் (திருவினான்குடி)