பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கவிதை பயிற்றும் முறை லட்சமும் கோடியும் வேண்டாம், அடா!-அதை ரட்சிக்க நம்மாலே ஆகு மோடா! அட்சய பாத்திரம் உண்டே, அடா-நமக்கு ஆரே நிகர்.இவ் வுலகில்? அடா! என்ற கவிமணியின் பாடல்களை வாய்க்குள் படிப்பதனால் பாட்டின் உணர்ச்சிகளைப் பெறுதல் முடியாது. கற்பிக்கும் ஆசிரியர் அவற்றைக் கும்மிப் பாட்டு மெட்டில் (ஒலி வகையில்) அமைத்துப் பாடினால்தான் பிச்சைக்காரர் கும்மாளத்தின்’ உணர்ச்சிகளைப் பெறுதல் முடியும்; அப்பாடல்களின் கருத் திலும் ஒன்றித் திளைக்க முடியும்; கவிஞன் குரலில் கவிதை யைப் படித்தால்தான் கவிதைகளின் முழு உணர்ச்சியையும் பெறுதல் கடும். ஆசிரியரே வழிகாட்டி: நல்ல முறையில் படித்தல் நல்ல முறையில் பேசுவதைப் பொறுத்தது. சரியாகப் பேசும் திறன் வாய்க்கப் பெறாதவர்கள் சரியாகப் படித்தல் இயலாது. எனவே, கீழ் வகுப்புகளிலிருந்தே சரியான ஒலிப்பு, சரியான உச்சரிப்பு போன்ற கூறுகளில் கவனம்செலுத்திக் குழந்தைகளைப் பயிற்றல் வேண்டும். உரையாடலில் தக்க இடங்களில் நிறுத்தியும், சில சொற்றொடர்களுக்கு அழுத்தம் கொடுத்தும் பேசினால்தான் பேசுவோர் தாம் கூறவேண்டியதைத் தெளிவாக உணர்த்த முடியும் என்பதை நாம் அறிவோம். அங்ங்னமே, சொற் பொழிவுகளிலும் இக்கூறுகளில் தக்க கவனம் செலுத்தப்பெறல் வேண்டும். அப்பொழுதுதான் கேட்போர் உள்ளத்தின் பேசு வோரின் கருத்துகள் தெளிவாகப் பதியும். இக்கூறுகள் யாவற்றி லும் நல்ல பயிற்சி ஏற்பட்டுக் கிட்டத்தட்ட அவை பழக்கமாகவே படிந்து விட்ட பிறகுதான் மாணாக்கர்கள் கவிதையைப் படிப் பதற்கு ஆயத்தமாக உள்ளனர் என்று கருதலாம். கவிதையை வாய்விட்டுப் படிக்கும்பொழுது நாம் கவிதையைத் தவிர வேறு கூறுகளில் கவனம் செலுத்துவதற்கில்லை; அதற்கு நேரமும் இல்லை. கவிதையைப் படிக்கும்பொழுது உச்சரிப்பிலும் பிற வற்றிலும் கவனம் செலுத்த நேர்ந்தால், நாம் சொற்களைத் தான் நன்கு ஒலிக்கலாம்; உச்சரிக்கலாம். கவிதையைப் படித்தல் முடியாது. மாணாக்கர் நிலையில் இதை வைத்து பார்ப்போம். ஆசிரியர்களின் குரலை மாணாக்கர்கள் நாடோறும் கேட் கின்றனர். கவிதைப் பாடத்தின் போதன்றிப் பிறபாடங்களின் பொழுதும் ஆசிரியர்களின் உச்சரிப்பு மாணாக்கர்கட்கு ஒரு 3. கவிமணி: மலரும் மாலையும்-பிச்சைக்காரர் கும்மாளம்-(6-11)