பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை வாய்விட்டுப் படித்தல் 母姆 'அவன் சுடர்மகளை-அண்ணே ஆடி யிழந்துவிட்டாய். தவறு செய்துவிட்டாய்-அண்ணே தருமங் கொன்றுவிட்டாய்: சோரத்திற் கொண்டதில்லை;--அண்ணே! சூதிற் படைத்ததில்லை. வீரத்தி ன்ாற்படைத்தோம்;-வெம்போர் வெற்றியி னாற்படைத்தோம்:

  • சக்கர வர்த்தியென்றே-மேலாந்

தன்மை படைத்திருந்தோம்; பொக்கென ஓர்கணத்தே-எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்.” ‘நாட்டையெல் லாந்தொலைத் தாய்:-அண்ணே நாங்கள் பொறுத்திருந்தோம்; மீட்டும் எமை யடிமை-செய்தாய். மேலும் பொறுத்திருந்தோம்; "துருப தன் மகளைத்-திட்டத் துய்மன் உடற்பிறப்பை, இருப கடைஎன்றாய்.-ஐயோ! இவர்க் கடிமையென்றாய்!” இதுபொறுப்பதில்லை.--தம்பி! எரிதழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்தான்-அண்ணன் கையை எரித்திடு வேசம்’ பார்த்தன் சொன்னது எனவீமன் சகதேவ னிடத்தே சொன்னான்; இதைக்கேட்டு வில்விசயன் எதிர்த்துச் சொல்வான்; மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன வார்த்தை சொன்னாய்? எங்குசொன்னாய்யாவர்முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீஅறிவைப் புகைத்த லாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்,