பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கவிதை பயிற்றும் முறை லாம்; அதனாலும் நிறைந்த பயனை எதிர்பார்க்கலாம். மனப் பாடம் செய்வதற்குரிய பாடல்களை அவர்களாகவே தேர்ந் தெடுத்தல் வேண்டும்; ஒவ்வொருவரும் அவரவர் விரும்புவன வற்றைத்தான் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இம்முறையினால் தான் கவிதைச் சுவையை வளர்க்க முடியும்; இதனால் பல்வேறு அழகான ஒலிவகைகளுக்கு அவர்களது காதினைப்பயிற்றமுடியும். இம்முறையால் மட்டிலுந்தான் கவிதைச் செல்வத்தைப் பற்றிய கருத்தினை அவர்கள் பெறுவர். கவிதையைப் படிப்பவர்களை, கவிதையை அநுபவிப்பவர்களை ஆக் க .ே வ ண் டு மே யன்றி கவிதையை ஆராய்பவர்களை உண்டாக்குவது நம் நோக்க மன்று என்பதை நினைவில் வைத்தல் வேண்டும். ஒரு சிலர் கவிதை ஆய்வாளர்களாக ஆதல் கூடும். நாம் அவர்களைக் காண நேரிட்டால், அவர்கட்கு அதிகப்படியாகத் துணை செய்தல் வேண்டும். ஆனால், பெரும்பாலோர் கவிதையை ஆராய்வதில்லை. எனினும், அவர்களைத் தாமாகவே கவிதை படிப்பதில் கொண்டு செலுத்தலாம். அவர்கள் தேவையான அளவு கவிதையைப் படிக்கக் கேட்டால், அவர்கள் அதன் வடிவத்திலும் ஒலியிலும் பழக்கம் அடைவர். அவர்கள் கவிதை படிப்பதை மகிழ்ச்சியடைவதுடன் இணைத்துக் கொள்வதில் வாய்ப்புகள் பெற்றால், அல்லது கவிதையைப் படிப்பதால் முரு குணர்ச்சியையும் வாழ்க்கையின் அழகான பொருள்களையும் இயற்கையின் அழகையும் பெறுவார்களாயின், அல்லது கவிதை அவர்கட்கு என்றும் ஒர் அழகுப் பொருளாக அமையுமாயின், அஃது என்றும் அவர்களிடம் நிலைத்து நிற்கும் பொருளாக வும் அமைந்துவிடும். இந்நோக்கம் நிறைவேறாவிடின், பாடத் திட்டத்தில் கவிதை இடம் பெற்றதால் யாதொரு பயனும் இல்லை. அது மாணாக்கர்களிடம் :முருகுணர்ச்சியை எழுப்பா விடில், அஃது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனின்மையை காட்டுகின்றது. இதற்குமேல் ஒன்றும் அதிகம் கூறுவதற் கில்லை. இன்றைய கேடான நிலை: மேற்கூறியவற்றால் ஆழ்ந்த படிப்பு அகன்ற படிப்பு ஆகிய இரண்டுக்கும் எவ்வளவு நேரத்தை எந்த அளவில் பிரித்து வழங்குவது என்ற முடிவற்ற பிரச்சினை எழு கின்றது. நாம் பள்ளியில் பயிலும் சிறுவர்களையும் சிறுமி களையும் வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று பல கல்வி வல்லுநர்கள் வற்புறுத்தி வருகின்றனர். நாளடைவில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் புகுந்து விடுவர். இளமையில் அவர்கட்கு விரிந்த தொரு கல்வியை நல்குதல்வேண்டும். நம்முடைய கல்வி நிலையங்