பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

7. கோப்பெருஞ் சோழன்

கோப்பெருஞ் சோழர் முடியுடை மூவேந்தர் குடியாகிய சோழர் குடியினர். இவர் அக் குடியில் பெருமை மிக்கவராகவும் தலைசிறந்தவராகவும் விளங்கிய காரணத்தால் கோப்பெருஞ் சோழர் என்று கூறப்பட்டார் போலும்! சோழர்கட்குரிய தலைநகரங்கள் ஐந்து. அவற்றுள் ஒன்று உறையூர். அதனைத் தம் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இவருக்கு உயிரனைய நண்பர்கள் இரு பெரும் புலவர்கள். அவர்கள் பிசிராந்தையார், பொத்தியார் என்பவர்கள். இந்த உண்மையினை திருக்குறள் உரையா சிரியராகிய பரிமேலழகர்

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்.”

என்னும், நட்பின் மாண்பை உணர்த்தும் குறட்பாவிற்கு உரை எழுதியபின், விசேடப் பொருள் உரைக்கும்போது “கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்” என்று எடுத்து மொழிந்து கோப்பெருஞ் சோழனுக்கும், சிராந்தையார்க்கும் இருந்த நட்பின் மாண்பினை நன்கு விளக்கிப் போந்தனர். ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியப் பொருளதி-