பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறனாயும் திறன் - 85 -


ஆழ்த்துகின்றன. பழைய பாஞ்சாலி சபதத்தையே பாரதி புது மெருகு கொடுத்துப் பாடியுள்ளமை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். யாப்பமைதி, சுவை வேறுபாடு முதலியவற்றை இக்காலத்திற்கேற்றவாறு அமைத்திருப்ப தால் அது பொதுமக்கள் சுவைக்கும் காவியமாகத் திகழ் கின்றது. காவியத்தில் காணப்பெறும் சில அபூர்வக் கற்ப னைகள், கனிந்த நாடகத் தன்மை, இடத்திற்கேற்ற யாப் பமைதி முதலிய கூறுகள் கல்விச் செருக்குடைய புலவர்க ளையும் களிப்பிக்குமாறு அமைந்துள்ளன.


பாரதியைப் பற்றி: 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்றும், 'பாரதத்தாய் செய்த தவப் பயனாய் வந்த பாவ லன் சுப்பிரமணிய பாரதி” என்றும் பாரதியை அறிமுகப்ப டுத்துவார் நம் கவிமணி. பாவேந்தர் பாரதிதாசனார்,

உய்வகை காட்டும் உயர்த மிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி” என்று பேசுவார்.


பாரதியைப் பற்றியும் அவருடைய கவிதையைப் பற் றியும் பொதுவாகவும், அவர்தம் பல பாடல்களைப் பற்றிச் சிறப்பாகவும் 'பாரதியும் பட்டிக்காட்டானும் என்ற தலைப் பில் திறனாய்ந்துள்ளார் கவிமணி. கவிதைத் திறனாய்வுக் குக் கவிதையாலேயே திறனாய்ந்த அற்புதத் திறனாய்வுக் கவிதை இது. பின்னோர்க்கெல்லாம் இஃது ஒரு கலங்கரை விளக்கம் போல் அமைந்து என்றும் நின்று வழிகாட்டும் சிறந்த ஒர் இலக்கியமாகும்.


பட்டிக்காட்டான் ஒருவன் பட்டணம் போகின்றான். பாரதி பாடல்களைப் பண்ணோடு கேட்கும் வாய்ப்பு 1. ம.மா. பாரதியும் பட்டிக்காட்டானும் - 3 2. மேலது - பாரதி மண்டபம் -2 3. 3. பா.த.க. பகுதி 2 - பக்.71