பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亭 C2 鲁 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு - § பாலும் கசந்ததடி - சகியே! படுக்கை நொந்ததடி: கோலக் கிளிமொழியும் - செவியில் குத்தலெடுத்த தடீ! நாலு வயித்தியரும் - இனிமேல் நம்புதற் கில்லை என்றார்; பாலத்துச் சோசியனும் - கிரகம் படுத்து மென்று விட்டான் (4) என்பதில் முதற் பகுதியில் நான்காம் பாடல் கண்கள் உறங்கஒரு காரண முண்டோ கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே? பெண்களெல் லோருமவர்வீடு சென்றிட்டார் பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக் கின்றான்; வெண்கல வாணிகரின் வீதி முனையில் வெளிப் புறத்திலெனைக் கானடி என்றான்; கண்கள் உறங்கலெனும் காரிய முண்டோ: கண்ணனைக் கையிரண்டும் கட்ட லின்றியே? (6) என்பது இரண்டாம் பகுதியில் ஆறாம் பாடல் சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும் தோழமை யில்லையடி தங்கமே தங்கம்; என்ன பிழைகளிங்கு கண்டிருக் கின்றான்? - அவை யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ (3) ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள் - என்னை அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம் துற்றி நகர் முரசு சாற்றுவ னென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் (5) என்பவை நான்காம் பகுதியில் மூன்றாம், ஐந்தாம் பாடல்கள்.